For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கரராமன்: போலீஸ் வெளியிட்ட அரசியல் அறிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யார் மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று தனிப்படைபோலீசார் அரசியல் விளக்கம் அளித்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரும், மதிமுகபொதுச் செயலாளர் வைகோவும் ஜெயலிதாவின் ஆட்சியில் வேண்டாதவர்கள் மீது கஞ்சா வழக்குகள் போட்டு வருகிறார்கள்என்று பேசி வருகின்றனர்.

இதையடுத்து சங்கரராமன் வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீஸார் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்தஅறிக்கை போலீஸ் துறை அறிக்கை மாதிரி இல்லாமல் அதிமுக அறிக்கை மாதிரி உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இரு மத்திய அமைச்சர்கள் சங்கர மடத்தின் மீது மக்களிடையே அனுதாபம் ஏற்படும் வகையில் பேசியுள்ளனர். அரசுக்குஎதிராகவும், இந்த விசாரணைக்கு எதிராகவும் பொய்யான தகவல்களை இரு அமைச்சர்களும் பரப்பியுள்ளனர்.

இரு அமைச்சர்களில் ஒருவர் மிகச் சிறந்த வழக்கறிஞராக இருந்தபோதிலும், இந்த வழக்கின் தன்மை குறித்து தெரிந்துகொள்ளாமல் புகார் கூறியிருப்பது வியப்பை தருகிறது.

இரு அமைச்சர்களும் குறிப்பிடும் சுந்தரேச அய்யர், ரகு, குமார், சுந்தர் ஆகியோர் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்படவில்லை,சதித் திட்ட வழக்குதான் பதிவாகியுள்ளது.

கதிரவனின் சகோதரர் அலங்கார், அகிலன் என்பவடம் ரூ. 2 லட்சம் கொடுத்து அப்ரூவர் ரவி சுப்பிரமணியத்தைத் தீர்த்துக் கட்டகோரியுள்ளார். சுந்தரேச அய்யர், ரகு, கதிரவன், மீனாட்சி சுந்தரம், குமார் ஆகியோரது உத்தரவின் பேரில் அலங்கார் இவ்வாறுசெயல்பட்டுள்ளார்.

இந்த சதித் திட்டம் சென்னை சிறையில் உருவானது. இதுகுறித்துத் தெரிய வந்தவுடன்தான் ரகு சேலம் சிறைக்கும், மீனாட்சி சுந்தரம்வேலூர் சிறைக்கும், கதிரவன் திருச்சிக்கும் மாற்றப்பட்டனர்.

அலங்கார் மீது போதைப் பொருள் சட்டத்தின் கீழ் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில்கூறப்பட்டதை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அகிலன் மீது மட்டும்தான் கஞ்சா வழக்குப் போடப்பட்டுள்ளது. மற்ற யார்மீதும் இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவாகவில்லை.

சில செய்தித்தாள்கள், சங்கர மடத்தின் மீது கொண்ட பக்தி காரணமாக, சங்கர மடத்திலிருந்து பல லட்சம் ரூபாய் பணத்தைவாங்கிக் கொண்டு அவர்களுக்கு சாதகமாகவும், தனிப்படையினரின் விசாரைணையை களங்கப்படுத்தம் விதத்திலும் செய்திவெளியிட்டு வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும், ஒரு ஏழைப் பிராமணர் கோவிலுக்குள்ளேயே கொலைக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டபோதஅமைதியாக இருந்தார்கள் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. சங்கரட மடத்தால் பலனடைந்த காரணத்தால்தான் அவர்கள்யாரும், அந்த சாதாரண மனிதனுக்காக பரிதாபப்படவில்லை, வருத்தப்படவில்லை.

இதுபோன்ற பொய்யான பிரசாரத்தால் தனிப்படை மனம் தளராது. தொடர்ந்து விசாரணை நியாயமான முறையில் தடங்கலின்றிநடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

எந்த வழக்கிலும் வழக்கமாக காவல்துறையில் இருந்து விளக்க அறிக்கை எல்லாம் வெளியிடப்படுவதில்லை. ஆனால், இந்தவிஷயத்தில் மட்டும் அதிமுக சார்பிலான அறிக்கை மாதிரி ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X