பரிதிமாற் கலைஞர் வாரிசுகளுக்கு ரூ15 லட்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழை செம்மொழியாக்க வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தவரானதமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் வாரிசுகளுக்கு ரூ. 15 லட்சம் பரிவுத் தொகையைமுதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.

மதுரை அருகே திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பரிதிமாற் கலைஞர். தமிழைசெம்மொழியாக அறிவிக்க வேண்டும் என முதல் முதலில் குரல் கொடுத்தவர். அவரதுபடைப்புகளை நாட்டுடமையாக்கி அவரது குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம் பரிவுததொகையாக வழங்கப்படும் என கருணாநிதி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படி பரிதிமாற் கலைஞரின் வாரிசுகள் 19 பேருக்கு இன்று பரிவுத் தொகையைதலைமைச் செயலகத்தில் கருணாநிதி வழங்கினார்.

இதேபோல மறைமலை அடிகளாரின் பேத்தி சுந்தரத்தம்மைக்கு ரூ. 1 லட்சம் பரிவுத்தொகை மற்றும் சிகிச்சை செலவாக ரூ. 50 ஆயிரம் நிதியையும் கருணாநிதி அவரிடம்வழங்கினார்.

இதேபோல மறைமலை அடிகளாரின் கொள்ளுப் பேத்தி கலைச் செல்விக்கு, தமிழ்வளர்ச்சித் துறையில் வேலைக்கான நியமன உத்தரவையும் வழங்கினார்.

Please Wait while comments are loading...