For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடை பயணம்-கேரளாவுக்கு வைகோ எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமை காக்கப்படத்தவறினால், நட்பும், பாசமும், இந்திய ஒருமைப்பாடும் உடைந்து போகும் என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழதத்தின் உரிமையை நிலை நாட்டும்வகையில் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது நடைப்பயணத்தின்போது வைகோ ஆற்றிய உரை:

இது கலவரம் நடத்துவதற்காக நடத்தப்படும் நடைப்பயணம் அல்ல. கலவரம் நடத்தவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் துளியும் இல்லை. அதே நேரம் எங்களின்ஜீவாதாரப் பிரச்சினையை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

இந்த நடைப்பயணத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது. போக்குவரத்துக்குத்தடங்கலும் ஏற்படாது. யாருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.

அணையின் உயரத்தை 153 அடியாக உயர்த்த வேண்டும் என்பதே நமது நியாயமானகோரிக்கை. தற்காலிகமாக 142 அடிக்கு உயர்த்த கோருகிறோம். கேரளாவில் 2,000டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் பாய்ந்து வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு 200டிஎம்சி தண்ணீர் வந்தால், போதும்.

மாநிலப் பிரிவினையின்போது தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்குள்போய் விட்டன. இப்போது அடிப்படை உரிமைகளும் பறிபோயுள்ளன.

அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பிரமதரைசந்தித்தார் கேரள முதல்வர். முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் என்றபொய்யான செய்தியை பிரதமரிடத்தில் தெரிவித்தார்.

நமது முதல்வர் ஏன் அப்படி டெல்லிக்குப் போகவில்லை? அமைச்சர்களைக் கூடஅனுப்பவில்லையே, ஏன் தொலைபேசியில் கூட பேசவில்லை. இப்படி தமிழக அரசுதனது கடமையிலிருந்து தவறியதால், கேரளாவின் கோரிக்கையை சட்டத்துறைக்கும்,நீர்வளத்துறைக்கும் அனுப்பி வைத்தார் பிரதமர்.

மன்மோகன்சிங் நீதியாளர்தான், நெறியாளர்தான். ஆனால் தமிழகத்தின் உரிமைக்குப்பங்கம் என்று வரும்போது அவரிடம் கேட்காமல் இருக்க முடியுமா? நான் கடந்த 24ம்தேதி டெல்லிக்குச் சென்று அவரை சந்தித்தபோது, கேரளாவின் கோரிக்கையை இருதுறைகளுக்கும் அனுப்பும் முன்பு தமிழக தரப்பை கேட்டிருக்க வேண்டாமா என்றுகேட்டேன்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் அதை அமல்படுத்த முன்வரவில்லை தமிழக அரசு.கலைஞர் தமிழக மக்களுக்கு கிரிமினல் துரோகம் செய்து விட்டார். அதனால் நமக்குநீதி கிடைக்கவில்லை. அணையை உடைப்போம் என கேரள அமைச்சர்பிரேமச்சந்திரன் பேசியதாக டெல்லி பத்திரிக்கையில் செய்தி வெளியானது.

அதைப் படித்து விட்டு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணுங்கள் எனஉச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அணையை உடைப்பேன் என்கிறார் பிரேமச்சந்திரன்.ஆனால் நாங்கள் கேரளத்து மக்களை சகோதர, சகோதரிகளாகத்தான் நினைக்கிறோம்.இங்கிருந்து அரிசி, பருப்பு போவதை நாங்கள் தடுக்க மாட்டோம்.

கிராபிக்ஸ் போட்டு அணை உடையப் போவதாக காட்டுகிறார்கள். அணைஉடைக்கப்பட்டால், அன்று இந்தியாவின் ஒருமைப்பாடு உடையும். உரிமைகளைகாக்கத் தவறினால் நட்பு, பாசம் எல்லாம் உடையும். அதை நாங்கள் விரும்பவில்லை.

உரிமையை மீட்டு எடுப்போம். இதற்காக நடைப்பயணம் மேற்கொள்ளும் எங்களுக்குஉடல் வலிமையையும், மன வலிமையையும் இயற்கைத் தாயே, நீதான் அருளவேண்டும் என்றார் வைகோ.

இன்று காலை வைகோ செக்கானூரணியிலிருந்து தனது நடைபயணத்தை தொடர்ந்தார்.மாலையில் உசிலம்பட்டி செல்லும் வைகோ அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில்பேசுகிறார். இரவு அங்கேயே தங்குகிறார்.

நாளை காலை ஆண்டிப்பட்டி கனவாய் பகுதிக்குச் செல்கிறார். அங்கு சிறிது நேரஓய்வுக்குப் பின்னர் ஆண்டிப்பட்டிக்கு செல்கிறார். இரவு அங்கு பொதுக் கூட்டத்தில்பேசுகிறார்.

21ம் தேதி காலை ஆண்டிப்பட்டியலிருந்து கிளம்பி தேனி செல்கிறார். மதிய உண்வைஅங்கு முடித்து விட்டு மாலையில் வீரபாண்டி செல்கிறார். இரவு பொதுக் கூட்டத்தில்பேசுகிறார். பின்னர் 22ம் தேதி உத்தமபாளையம் செல்லும் வைகோ, அங்கு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இரவில் பாளையத்தில் தங்கும் வைகோ, மறு நாள் காலைகம்பல் செல்கிறார்.

மாலை கம்பத்திலிருந்து புறப்பட்டு கூடலூரை இரவு அடைகிறார். அத்துடன்நடைபயணம் முடிகிறது. அன்று இரவு கூடலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில்வைகோ பேசுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X