For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்திரமாக தரையிறங்கியது டிஸ்கவரி

By Staff
Google Oneindia Tamil News

ஹூஸ்டன்:12 நாள் விண்பயணத்தை முடித்துக் கொண்டு டிஸ்கவரி விண்கலம், 7 விண்வெளி வீரர்களுடன் பத்திரமாகதரையிறங்கியது.

இந்திய வம்சாவளிப் பெண்ணான சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 8 விண்வெளி வீரர், வீராங்கனைகளுடன்கடந்த 12 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டது டிஸ்கவரி.

Discovery lands in night

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒயர்களை மாற்றி அமைக்கும் பணியில் விண்வெளி வீரர்கள்ஈடுபட்டனர். இந்தப் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ் மட்டும் சர்வதேச விண்வெளிமையத்தில் தங்கிக் கொண்டார்.

மற்ற வீரர், வீராங்கனைகள் நேற்று பூமிக்குத் திரும்பினர். திட்டமிட்டபடி டிஸ்கவரி பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்த நிலையில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்ட நேரத்தில் டிஸ்கவரிதரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இருப்பினும் சில நிமிட தாமத்ததிற்குப் பின்னர் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள விமான நிலையத்தில்டிஸ்கவரி அமெரிக்க நேரப்படி மாலை 5.32 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது.

டிஸ்கவரி தரையிறங்கியதும் அதில் இருந்த அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைநடத்தப்பட்டது. பின்னர் டிஸ்கவரி கமாண்டர் மார்க் போலன்ஸ்கி தலைமையிலான விண்வெளி வீரர்களை நாசாஅதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் போலன்ஸ்கி பேசுகையில், நாசா குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது மிகப் பெரிய அனுபவம்என்றார். போலன்ஸ்கியுடன் நேற்று பூமிக்குத் திரும்பிய பிறர்: பைலட் வில்லியம் ஓபலீன், நிக்கோலஸ் பாட்ரிக்,ராபர்ட் கர்பீம், ஜோன் ஹிக்கின்பாதம், கிறிஸ்டர் பியூகல்சான்ட், தாமஸ் ரீட்டர் ஆகியோர்.

சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதங்களைக் கழிக்கவுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X