For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு ஒப்பந்தம்-மத்திய அரசுக்கு ஜெ அட்வைஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:அணு சக்தி ஒப்பந்தம் போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் செய்யும் முன் அது குறித்து நாடாளுமன்றத்தில் முழுஅளவில் விவாதிக்க வேண்டும், அதற்கேற்ப இந்திய அரசியல் சட்டத்தையும் திருத்த வேண்டும் என்று முன்னாள்முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா மிக விளக்கமான, மிகவும் அவசியமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அதன் விவரம்:

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் இந்தியாவின் மின் உற்பத்திக்கான யுரேனியத்தை செறிவூட்டவும்,அமைதி நோக்கங்களுக்கும் வழி வகுக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவை விடஅமெரிக்காவில் அதுவும் குறிப்பாக அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் விரிவான முறையில்விவாதிக்கப்பட்டு விட்டது.

இந்திய யுரேனியத்தை செறிவூட்ட உதவுகிற சாக்கில், நமது அணு சக்தி ஆராய்ச்சியில் அமெரிக்கா பின்புறம்வழியாக நுழைகிறது என உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் எப்.ஐ.என்.எஸ். என்றஅமைப்பு கருத்தரங்கத்தில் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை இந்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியம் குறித்து பல்வேறு கருத்துக்களை அணு விஞ்ஞானிகள் எடுத்து வைத்தனர்.

இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் அணு உலைகளின்செயல்பாடு, குறிப்பாக அதன் விரிவாக்கம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விரிவான வகையில் நற்சான்றுஅளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. இந்திய அணு சக்தி திட்டத்திற்கு எது நன்மை பயக்கும்என்பதை இந்தியா தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்துக்குக் கூட அதை தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது. இந்திய அரசியல் சட்டம் அந்தஅதிகாரத்தை மக்களவை, மாநிலங்களவைக்கு வழங்கவில்லை. அணுசக்தி துறையில் இந்தியாவை வலிமைவாய்ந்த நாடாக உயர்த்துவதற்காக 50 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு வரும் ஆராய்ச்சி விஞ்ஞானிகளும்,அறிஞர்களும், அறிவியல் சமூகத்தினரும் இந்த அவல நிலையை கைகட்டி வாய் பொத்தி சகித்துக் கொள்ளத்தான்வேண்டுமா?

எந்த ஒரு வெளிநாட்டு அரசுடனும் எந்த உடன்பாட்டையும் செய்து கொள்வதற்கு இந்திய அரசின் தலைவருக்குஇந்திய அரசியல் சட்டம் அதிகாரம் வழங்குகிறது. இப்படிபட்ட எந்த ஒரு உடன்பாடு குறித்த ரகசியத்தையும்அவர் வெளியிடாமல் இருப்பதற்கும் அது அதிகாரம் வழங்குகிறது.

இப்படிபட்ட எந்த ஒரு உடன்பாட் டையும் இந்திய அரசு நிறைவேற்றுவதற்கு இந்திய நாடாளுமன்றத்தின்ஒப்புதல் தேவை இல்லை. இந்த அளவுக்கு எந்த ஒப்பந்தத்தையும் செய்து கொள்ளும் வரைமுறையற்ற அதிகாரம்மத்திய அரசிடம் உள்ளது.

இந்திய-அமெரிக்க அணு சக்தி உடன்பாடு போன்ற ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளின் ரகசியத்தன்மைகாரணமாக, இந்திய இறையாண்மையை அன்னிய சக்திகளின் காலடியில் வைக்கக் கூடிய ஆபத்து ஏற்படவும்வாய்ப்புள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி இப்படிபட்ட ஒப்பந்தங்களில் மறுபேச்சு வார்த்தைக்கு இடமில்லை.

ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள வெளிநாட்டு அரசும் இப்படிபட்ட மறுபேச்சு வார்த்தையை ஏற்றுக் கொள்ளாது.வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம், அந்தந்த நாடுகளின்நாடாளுமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கையில் இந்திய மக்களுக்கு ஏன் அந்த அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளது? தங்களுடையதலைவிதியை அடியோடு சீரழிக்கக்கூடிய மிகவும் ஆபத்தான பின் விளைவுகளை உருவாக்கக் கூடியஒப்பந்தங்களை மத்திய அரசு வெளிநாடுகளுடன் செய்து கொள்ளும் போது, அதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும்இந்திய மக்களுக்கு அதிகாரம் ஏன் வழங்கப்படக் கூடாது?

நமது நிர்வாக இயந்திரத்தை திறமையற்றதாகவோ அல்லது லஞ்சம் நிறைந்ததாகவோ அல்லது குறிப்பிட்டசுயநலம் சார்ந்த திட்டத்திற்கு உட்பட்டதாகவோ நினைக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது.

நமது நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இது போன்ற முக்கியமான ஒப்பந்தங்களின் எல்லா வகையானசாதக, பாதகங்களையும் ஆழமாக ஆராய்ந்த பிறகே அதைப் பற்றி ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒரு சிலதனிநபர்களுக்குத் தான் அத்தகைய அறிவும் திறமையும் இருக்கும் என்று நினைப்பது தற்கொலைக்கு சமமானது.அரசியல் சாசனத்தில் இருக்கும் இந்த குறையைப் போக்க அல்லது நீக்க தகுந்த ஒரே வழி, அரசியல் சாசனத்தில்ஒரு திருத்தம் கொண்டு வருவது தான்.

இந்திய அரசியல் சாசனத்தின் 368வது பிரிவின்படி நமது ஆட்சியாளர்கள் எந்த ஒரு நாட்டுடனும் அதிகாரஅமைப்புகளுடனும் ஏற்படுத்தும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X