For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை: இந்தியா நேரில் தலையிடாது-பிரணாப்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிடாது என்றும்,இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சி தொடரும்என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினையில், இந்தியா நேரடியாக தலையிட வேண்டும், விரைந்துசெயல்பட்டு அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றுதமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரி வருகின்றன.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம்சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுகவும் பங்கேற்றது.இந்த நிலையில், இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிடாது என்றுசென்னை வந்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாகதெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பிரணாப் முகர்ஜி பேசுகையில், தனி ஈழம் என்றகோரிக்கையை ஏற்க முடியாது. இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு,அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அமைதித் தீர்வையே இந்தியஅரசு விரும்புகிறது.

தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அந்த அமைதித் தீர்வுஅமைய வேண்டும். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலை தெளிவான ஒன்று.இனப் பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிடாது.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே மீண்டும்பேச்சுவார்த்தையை தொடங்க நார்வே மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றிபெறும் என்று நம்புகிறேன்.

இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி தருவது என்பது புதிதானவிஷயமல்ல. நீண்ட காலமாக நடந்து வரும் ஒன்றுதான். எனவே இலங்கைபடையினருக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

இலங்கைக்கு நாங்கள் பயிற்சி மட்டுமே கொடுக்கிறோம். ஆபத்தான அழிவுஆயுதங்களை நாங்கள் கொடுக்கவில்லை. இந்திய பாதுகாப்புப் படையினர் அளிக்கும்பயிற்சிக்கு வெளிநாடுகளில் நல்ல மரியாதை உள்ளது. எனவேதான் பல்வேறுநாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினரும் இங்கு வந்து பயிற்சி பெறுகின்றனர்.

இலங்கை கடற்படைக்கு புனேவிலிருந்து சென்ற வெடிபொருட்கள்,தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடியவைதான். இதுபோன்ற வெடிபொருட்களைஅனுப்புவது சிறிது காலமாகவே நடந்து கொண்டுதான் உள்ளது என்றார் பிரணாப்முகர்ஜி.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிட்டு தமிழர்களைக் காக்கவேண்டும் என்று டெல்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை தமிழ்எம்.பிக்கள் நேரில் சந்தித்து நேற்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிடாது,இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும், வெடிபொருட்கள்அனுப்புவது சில காலமாகவே நடந்து வருகிறது என்று பிரணாப் முகர்ஜிகூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வெளியுறவு துறை கிளை அலுவலகம்:

இதற்கிடையில் மத்திய அரசின் வெளியுறவுத் துறையின் கிளை அலுவலகம் விரைவில் சென்னையில் அமைக்கப்படும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

அகில இந்திய பாஸ்போர்ட் அதிகாரிகளின் மாநாடு, சென்னையில் நடந்தது. இதில் பிரணாப் பேசுகையில்,

வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகாரித்து வருகிறது. இதனால் புதிய பாஸ்போர்ட் வழங்குவது, பாஸ்போர்ட் புதுப்பித்தல்பணிகள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள 463 மாவட்ட பாஸ்போர்ட் மையங்களைத் தவிர, 1,095 விரைவு அஞ்சல் சேவை மையங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள்பெறப்படுகிறது. இப்பணி சிறப்பாக நடந்து வருவதற்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறனையும், வெளியுறவுத்துறை இணையமைச்சர்அகமதுவையும் பாராட்டுகிறேன்.

அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களும் கணினிமயமாக மாற்றப்படும். பயோமெட்ரிக் பாஸ்போர்ட் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது.இதனால் பாஸ்போர்ட்டில் கைவிரல் ரேகை பதிவு செய்யப்டும். இதன் மூலம் போலி பாஸ்போர்ட்களை தடுக்கமுடியும்.

தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தத்கல் முறையில் ரூ. 2,500 கட்டணம் செலுத்திவிண்ணப்பித்தவர்களுக்கு 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் (இதற்கு முன் 10 நாட்களாக இருந்தது).

ரூ. 2,000 கட்டணம் செலுத்தினால் 14 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் (இதற்கு முன் 20 நாட்களாக இருந்தது).

தத்கல் முறையில் 5 நாட்களுக்கு பதிலாக மூன்று நாட்களுக்குள் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படும். அவர்களுக்கு போலீஸ் சரிபார்ப்பு அறிக்கைதேவையில்லை.

தத்கல் முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு மத்திய அரசின் துணை செயலாளர் அந்தஸ்தில் உள்ளவர்கள், இதற்கு சமமான அந்தஸ்தில் உள்ள மாநில அரசுஅதிகாரிகள், சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட், முதல் வகுப்பு ஜூடியல் மாஜிஸ்திரேட், ராணுவத் துறையிலுள்ள மேஜர், போலீஸ் இன்ஸ்பெக்டர். தாசில்தார்ஆகியோர் சரிபார்ப்பு சான்றதழ் வழங்கலாம்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது குடம்பதினருக்கு தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெற அவர்களது அலுவலகதலைமை அதிகாரிகளிடம் சான்று பெறலாம்.

சாதாரணமாக விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். தத்கல் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா, ஹைத்ராபாத் ஆகிய இடங்களில் செயல்படுவது போலவே மத்திய அரசின் வெளியுறவுத்துறையின்கிளை அலுவலகம் சென்னையில் விரைவில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந் நிகழ்ச்சியில் இணையமைச்சர் அகமத் பேசுகையில், மதுரை மற்றும் கோவையிலும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் திறக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X