For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடாவடி புரோக்கர்கள்-தவிக்கும் பயணிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவுடிக்கெட்டுக்களை புரோக்கர்கள் இடையில் புகுந்து ஒட்டுமொத்தமாக வாங்கிச் சென்றுவிட்டதால், பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றையொட்டி தலைநகர் சென்னையிலிருந்து பிறஊர்களுக்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம்பஸ்களிலும், ரயில்களிலும் அலை மோதி வருகிறது.

கிட்டத்தட்ட பொங்கல் வரைக்கும் டிக்கெட்டுகள் நிரம்பி விட்டதால், சிறப்புரயில்களை இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களிலும் முன்பதிவுசெய்ய கூட்டம் அலைமோதுகிறது.

திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் என்பதால் ஊர்களுக்குச் செல்ல ரயில்கள், பேருந்துகளில்கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்குஇன்று இரவு 7 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் விடப்படுகிறது.

மதுரையிலிருந்து நாகர்கோவில் வரையிலான தென் மாவட்ட மக்களுக்கு இது மிகவும்உதவியாக இருக்கும் என்பதால் இந்த ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கானமுன்பதிவு இன்று காலை தொடங்கியது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் காலை 5 மணியிலிருந்தேபயணிகள் முன்பதிவு செய்ய கூடி விட்டனர். ஆனால் அவர்களை மீறி ஏராளமானடிக்கெட் புரோக்கர்களும் அனைத்து கவுண்டர்களையும் ஆக்கிரமித்து நின்றுகொண்டனர்.

8 மணிக்கு கவுண்டர்கள் திறந்தவுடன் அவர்கள்தான் மொத்தமாக முன்பதிவுபாரங்களை கொடுத்தனர். ஒரு நபர் 2 பாரங்களுக்கு மேல் தரக் கூடாது என்றுரயில்வே விதி கூறுகிறது. ஆனால் அதை மீறி ஒவ்வாரு நபரும் 20 பாரம், 30 பாரம்என கட்டுக் கட்டாக கொடுத்தனர்.

அந்தப் பாரங்களை கவுண்டர்களில் இருந்த ஊழியர்களும் சந்தோஷமாக வாங்கிமுதலில் அவற்றைத்தான் கவனித்தார்கள்.

இதனால் வ>சையில் காத்திருந்த அப்பாவி பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

புரோக்கர்களிடமிருந்து இப்படி ஒட்டுமொத்தமாக பாரங்களை வாங்குவது நியாயமேஇல்லை என்று அவர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். ஆனால் புரோக்கர்களும்கண்டுகொள்ளவில்லை, உள்ளே டிக்கெட் போட்ட ஊழியர்களும்கண்டுகொள்ளவில்லை.

பாதுகாப்புக்காக நின்றிருந்த ரயில்வே போலீஸாரும் கண்டுகொள்ளவில்லை. இது கூட்டுகொள்ளை போலும்.

மொத்தம் உள்ள 10க்கும் மேற்பட்ட கவுண்டர்களில் இதே நிலைதான் அனைத்துகவுண்டர்களிலும் புரோக்கர்கள்தான் அட்டூழியமாக நின்று கொண்டு மொத்தமாகடிக்கெட்டுக்களை வாங்கிச் சென்றனர்.

ஒரு கட்டத்தில் புரோக்கர்களை நோக்கி பயணிகள் அடிக்கப் பாய்ந்தனர். பதிலுக்குபுரோக்கர்களும் தாக்கத் தயாராகினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.முன்பதிவுக்கான கண்காணிப்பாளர் விரைந்து வந்து அனைவரையும் சமரசம் செய்தபின்னர் அமைதியாக டிக்கெட் முன்பதிவு நடந்தது.

சென்னையிலேயே எழும்பூர் ரயில் நிலையத்தில்தான் இப்படி நடப்பதாகவும், பிறரயில் நிலையங்களில் இந்த அளவுக்கு தொல்லை இல்லை என்றும் ரயில் பயணிகள்குமுறுல் வெளியிட்டனர்.

இதுபோல நடப்பது இது முதல் முறையல்ல. சமீபத்தில் தீபாவளியையொட்டிவிடப்பட்ட ஒரு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் கவுண்டர்கள் திறந்தசில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இத்தனை டிக்கெட்டுகளையும் பயணிகள்எடுக்கவில்லை. பெரும்பாலான டிக்கெட்டுக்களை புரோக்கர்கள்தான் எடுத்து பன்மடங்கு விலைக்கு வெளியில் விற்றனர்.

ரயில்வே அமைச்சகம் சுறு சுறுப்பாக செயல்பட்டு அப்பாவி பயணிகளை புரோக்கர்நாய்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

பஸ் கட்டணம் உயர்வு:

ரயில்கள் மட்டுமின்றி பஸ் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை குண்டக்கமண்டக்க உயர்த்தி பயணிகளை உறிஞ்சி வருகின்றனர். நேராக போய் ஆம்னி பஸ் கவுண்டரில் டிக்கெட் கேட்டால் இல்லை என்கிறார்கள். ஆனால், அங்குநிற்கும் புரோக்கர்கள் டிக்கெட்டுகளை விற்கின்றனர்.

கவுண்டரில் அதிக விலைக்கு விற்க முடியாது என்பதால் புரோக்கர்கள் மூலம் இந்த தகிடுதித்தத்தை செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரூ. 300 கட்டணத்துக்குப் பதில் ரூ. 700 வரை வசூலிக்கிறார்கள்.

8 புரோக்கர்கள் கைது:

இதற்கிடையில் சென்னை கோயம்பேட்டில் தனியார் பேருந்துகளுக்கு அதிக கட்டணம் வசூலித்த 8 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.

புரோக்கர்களின் அரிப்பு குறித்து பொது மக்களிடம் இருந்து புகார்கள் குவிந்ததையடுத்து அண்ணாநகர் போலீசார் கோயம்பேட்டில் சோதனை நடத்தினார்கள்.பயணிகள் போல போலீசார் மாறு வேடத்தில் சென்று கூடுதல் கட்டணம் வசூலித்த ராஜேந்திரன், மாவூத், இளமாறன், முருகன், கண்ணன், செல்வம்,ஐயப்பன் மற்றும் அண்ணாத்துரை ஆகிய 8 புரோக்கர்களை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X