மாணவி தற்கொலை-மாணவர்கள் போராட்டம்அண்ணாமலை பல்கலை. மூடப்பட்டது

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் காப்பி அடித்து பிடிபட்ட மாணவி தற்கொலை செய்து கொண்டதால் மாணவர்கள் பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து பல்கைலக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செய்முறைத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில் காப்பி அடித்ததாக சண்டிகரைச் சேர்ந்த சேத்னா என்ற மாணவி பிடிபட்டார். அவரை ெதாடர்ந்து செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் அனுமதிக்கவில்லை.

இதனால் மனம் உடைந்த சேத்னா தற்கொலை ெசய்து ெகாண்டார். இதையடுத்து ேநற்று மாணவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். சாலை மறியலில் அவர்கள் இறங்கினர். மேலும் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

உடனடியாக விரைந்து வந்த போலீஸார், மாணவர்களை கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் மாணவர்களில் சிலர் போலீஸார் மீது கல்வீசி தாக்கினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ேநற்று இரவு முதல் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது. பல்கைலக்கழக விடுதியும் மூடப்பட்டு விட்டது. விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பதட்டம் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...