தமிழக மக்களவைத் தொகுதிகள் அறிமுகம்-2. சென்னை வடக்கு

Subscribe to Oneindia Tamil
Chennai
சென்னை: தமிழக மக்களவைத் தொகுதிகள் வரிசையில் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த சென்னை வடக்கு தற்போது 2வது தொகுதியாகியுள்ளது.

பழைய வட சென்னை தொகுதியில், ராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.

தற்போது இத்தொகுதியில் திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), ராயபுரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. துறைமுகம் போய் விட்டது. பெரம்பூர் பொதுத் தொகுதியாக மாறியுள்ளது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) என பிரிந்துள்ளன.

வட சென்னை தொகுதி திமுகவின் கோட்டை. 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தொகுதியில், திமுக இதுவரை 9 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 3 முறை வெற்றி கிடைத்துள்ளது.

கடந்த தேர்தலி்ல வென்ற செ.குப்புசாமியே இந்த முறையும் இத்தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தல் நிலவரம்..

செ.குப்புசாமி - திமுக - 5,70,122.
சுகுமார் நம்பியார் - பாஜக - 3,16,583
வெற்றி வித்தியாசம் - 2,53,539 வாக்குகள்.

தொழிலாளர்கள் நிரம்பிய தொகுதி. திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவராக உள்ள செ.குப்புசாமி, கடந்த மூன்று முறையாக இத்தொகுதியின் எம்.பியாக உள்ளார்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள் ..

1957-62 - அந்தோணி பிள்ளை - சமூக கட்சி.
1962-67- டாக்டர் பி.சீனிவாசன் - காங்கிரஸ்.
1967-71 - கிருஷ்ணன் மனோகரன் - திமுக.
1971-77 கிருஷ்ணன் மனோகரன் - திமுக.
1977-80 - ஏ.வி.பி.ஆசைத்தம்பி - திமுக.
1980-84 - ஜி.லட்சுமணன் - திமுக.
1984-89 - என்.வி.என்.சோமு - திமுக.
1989-91 - தா.பாண்டியன் - காங்கிரஸ்.
1991-96 - தா.பாண்டியன் - காங்கிரஸ்.
1996-98 - என்.வி.என்.சோமு - திமுக.
1998-99 - செ.குப்புசாமி - திமுக.
1999-04 - செ.குப்புசாமி - திமுக.
2004-2009 - செ.குப்புசாமி - திமுக.

முதல் தேர்தல்...

நடந்த ஆண்டு - 1957.
வென்றவர் - அந்தோணிப் பிள்ளை (சோஷலிச கட்சி).

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்