தமிழக மக்களவைத் தொகுதிகள் அறிமுகம்-1 திருவள்ளூர்

Subscribe to Oneindia Tamil
Tiruvallur District
திருவள்ளூர்: மே 13ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

தற்போதைய லோக்சபா தேர்தல் திருத்தி அமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள தொகுதிகள் 39. இந்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், சில தொகுதிகள் புதிதாக சேர்ந்துள்ளன. சில தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. சில தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வட எல்லை மாவட்டமான திருவள்ளூர் மற்றும் தென் எல்லை மாவட்டமான கன்னியாகுமரி ஆகியவற்றின் பெயரில் முதல முறையாக தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட 39 தொகுதிகள் குறித்த ஒரு அறிமுகம் இது..

1. திருவள்ளூர் (2009ல் அறிமுகமாகும் தொகுதி)

தமிழக மக்களவைத் தொகுதிகளில் முதலில் வரும் தொகுதி திருவள்ளூர். புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி இது.

இதற்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி (இப்போது தனி தொகுதி), திருவள்ளூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளையம், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி, மாதவரம் சட்டசபைத் தொகுதிகளையும் சேர்த்து திருவள்ளூர் லோக்சபா தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக உருவாகியுள்ள திருவள்ளூர் தொகுதியில் யார் வெற்றி வாகை சூடி தொகுதியின் முதல் எம்.பியாகப் போவது என்ற எதிர்பார்ப்பில் திருவள்ளூர் வாக்காளர்கள் உள்ளனர்.

திமுகவின் கோட்டை:

தமிழகத்தின் எல்லைப் பகுதி மாவட்டமான திருவள்ளூரின் பெயரைத் தாங்கி உருவாக்கப்பட்டுள்ள இந்த தொகுதி,
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் கீழ் முதலில் இருந்தபோது, திமுகவின் கோட்டையாக திகழ்ந்தது. மொத்தம் 6 முறை திமுக இத்தொகுதியில் வென்றுள்ளது.

அடுத்து காங்கிரஸ் கட்சியின் வசம் 3 முறை இருந்துள்ளது இத்தொகுதி. அதிமுகவுக்கு இரண்டு முறை வெற்றி கிடைத்தது.

கடந்த முறை வட சென்னைத் தொகுதியின் கீழ் இருந்த சில பகுதிகளைப் பிரித்து ஆவடி, மாதவரம் என இரு சட்டசபைத் தொகுதிகளாக்கியுள்ளனர். அந்தத் தொகுதிகள் தற்போது திருவள்ளூர் எம்.பி. தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இத்தொகுதியின் கீழ் வரும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டசபைத் தொகுதிகளில் அதிமுகவும், பூந்தமல்லியில் காங்கிரஸும், திருவள்ளூரில், திமுகவும் வென்றன.

தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொகுதி இது. மேலும் தலித் மக்களின் வாக்குகளும் இங்கு கணிசமாகவே உள்ளது. தெலுங்கு மொழி பேசுவோரும் வன்னிய சமுதாயத்தினரும் கணிசமான அளவில் உள்ளனர்.

கூட்டணிகள் அமைவதைப் பொறுத்து இத்தொகுதியின் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்படும் சூழல் உள்ளது.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்