மக்களவை தொகுதி அறிமுகம்-4: மத்திய சென்னை

Subscribe to Oneindia Tamil
Chennai Central
சென்னை: சென்னை நகரின் முக்கிய தொகுதிகளில் ஒன்று சென்னை மத்திய தொகுதி. நகரின் முக்கியப் பிரபலங்கள் பலரும் வசிக்கும் பகுதிகள் இத்தொகுதியில் அடக்கம்.

பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் ஆகியவை இத்தொகுதியின் கீழ் முன்பு இருந்தன.

தற்போது வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகள் இதில் இடம் பெறுகின்றன.

இவற்றில் இதுவரை தனித் தனி தொகுதிகளாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதி சென்னை மத்திய தொகுதியில் இணைந்துள்ளது.

வழக்கம்போல இந்தத் தொகுதியும் திமுகவுக்கே இதுவரை அதிக அளவிலான வெற்றிகளைக் கொடுத்துள்ளது.
மொத்தம் 6 முறை இங்கு திமுக வென்றுள்ளது. காங்கிரஸுக்கு இரண்டு முறை வெற்றியைக் கொடுத்துள்ளது. ஒருமுறை ஜனதாக் கட்சி வென்றுள்ளது. ஆனால் அதிமுக இதுவரை இங்கு வெற்றிக் கனியை சுவைக்கவில்லை.

1996ம் ஆண்டு முதல் 2004 வரை இத்தொகுதி முரசொலி மாறன் வசம் இருந்தது. அதன் பின்னர் இத்தொகுதியின் எம்.பியாக இருப்பவர் அவரது புதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன். இந்த முறையும் தயாநிதி மாறனே போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தல் நிலவரம் ...

தயாநிதி மாறன்(திமுக) - 3,16,329.
பாலகங்கா (அதிமுக) - 1,82,151.
வெற்றி வித்தியாசம் - 1,34,178 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள் ...

1977-80 - பி.ராமச்சந்திரன் - ஜனதா.
1980-84 - ஏ.கலாநிதி - திமுக.
1984-89 - ஏ.கலாநிதி - திமுக.
1989-91 - இரா. அன்பரசு - காங்கிரஸ்.
1991-96 - இரா.அன்பரசு - காங்கிரஸ்.
1996-98 - முரசொலி மாறன் - திமுக.
1998-99 - முரசொலி மாறன் - திமுக.
1999-04 - முரசொலி மாறன் - திமுக.
2004-09 - தயாநிதி மாறன் - திமுக.

முதல் தேர்தல் ...

நடந்த ஆண்டு - 1977.
வென்றவர் - பி.ராமச்சந்திரன் (ஜனதா)
தற்போதைய உறுப்பினர் - தயாநிதி மாறன் (திமுக)

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்