மக்களவை தொகுதி அறிமுகம்-3: தென் சென்னை

Subscribe to Oneindia Tamil
Chennai
சென்னை: லோக்சபா தொகுதிகள் வரிசையில் 3வதாக வரும் தொகுதி. இதுவரை இத்தொகுதியில் இருந்து வந்த சட்டசபைத் தொகுதிகள் - தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம்.

தற்போதைய புதிய திருத்தியமைக்கப்பட்ட பின்னர் இத்தொகுதியில், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இடம் பெறுகின்றன.

இவற்றில் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகியவை புதிய தொகுதிகள் ஆகும்.

தென் சென்னை தொகுதி திமுக வசம் அதிக முறை இருந்துள்ளது. மொத்தம் 7 முறை திமுக வென்றுள்ளது. அடுத்தபடியாக இதை காங்கிரஸ் 5 முறை கைப்பற்றியுள்ளது. இங்கு அதிமுகவுக்கு ஒரே ஒரு முறைதான் வெற்றி கிடைத்துள்ளது.

திமுகவின் கோட்டையாக திகழ்ந்து வரும் தென் சென்னை தொகுதியின் கீழ் வரும் சட்டசபைத் தொகுதிகளில் தற்போது தி.நகர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், ஆலந்தூர், தாம்பரத்தில் திமுகவும் உறுப்பினர்களாக உள்ளன.

பல பிரபலங்களைக் கொடுத்த தொகுதி இது. பேரறிஞர் அண்ணா, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, முரசொலி மாறன், ஆர்.வெங்கட்ராமன், வைஜயந்தி மாலா பாலி, டி.ஆர்.பாலு ஆகியோர் வென்ற தொகுதி இது என்பதால் எப்போதுமே இந்தத் தொகுதி விஐபி தொகுதியாகவே திகழ்ந்து வருகிறது.

கடந்த தேர்தல் நிலவரம் ...

டி.ஆர்.பாலு (திமுக) - 5,64,578.
பதர் சயீத் (அதிமுக) - 3,43,838.
வெற்றி வித்தியாசம் - 2,20,740 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள் ...

1957-62 - டி.டி. கிருஷ்ணமாச்சாரி - காங்கிரஸ்.
1962-67 - கிருஷ்ணன் மனோகரன் - திமுக.
1967-69 - சி.என்.அண்ணாதுரை - திமுக.
1971-77 - முரசொலி மாறன் - திமுக.
1977-80 - ஆர். வெங்கட்ராமன் - காங்கிரஸ்.
1980-84 - ஆர்.வெங்கட்ராமன் - காங்கிரஸ்.
1984-89 - வைஜயந்தி மாலா பாலி - காங்கிரஸ்.
1989-91 - வைஜயந்தி மாலா பாலி - காங்கிரஸ்.
1991-96 - ஆர்.ஸ்ரீதரன் - அதிமுக.
1996-98 - டி.ஆர்.பாலு - திமுக.
1998-99 - டி.ஆர்.பாலு - திமுக.
1999-04 - டி.ஆர்.பாலு - திமுக.
2004-09 - டி.ஆர்.பாலு - திமுக.

முதல் தேர்தல் ...

நடந்த ஆண்டு - 1957.
வென்றவர் - டி.டி.கிருஷ்ணமாச்சாரி (காங்கிரஸ்)
தற்போதைய உறுப்பினர் - டி.ஆர். பாலு (திமுக)

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்