மக்களவை தொகுதி அறிமுகம்-6:காஞ்சிபுரம்

Subscribe to Oneindia Tamil
Kancheepuram
காஞ்சிபுரம்: பக்திக்கும், பட்டுக்கும் பெயர் போன நகரம் காஞ்சிபுரம். பேரறிஞர் அண்ணா என்ற பெருந்தகையைக் கொடுத்தும் காஞ்சிபுரமே. இத்தகைய பெருமை பெற்ற காஞ்சிபுரத்தின் பெயரில் முதல் முறையாக லோக்சபா தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை இருந்து வந்த செங்கல்பட்டு என்ற பெயரை மாற்றி காஞ்சிபுரம் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்.

தற்போதைய புதிய காஞ்சிபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ள தொகுதிகள் - செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்.

அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வென்ற தொகுதி செங்கல்பட்டு. இடையில் காங்கிரஸும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. 1999 முதல் இந்தத் தொகுதி பாமக வசம் மாறியது.

இதுவரை அதிமுக 5 முறை செங்கல்பட்டு தொகுதியில் வென்றுள்ளது. திமுக, காங்கிரஸ் தலா 3 முறையும், பாமக இரு முறையும் இங்கு வென்றுள்ளன. இரு முறை சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஓ.வி.அழகேசன், சிட்டிபாபு, அன்பரசு, ஜெகத்ரட்சகன், ஏ.கே.மூர்த்தி ஆகிய பிரபலங்கள் வென்ற தொகுதி. தற்போதைய செங்கல்பட்டு எம்.பி. ஏ.கே.மூர்த்தி ஆவார்.

கடந்த தேர்தல் நிலவரம் (செங்கல்பட்டு)

ஏ.கே.மூர்த்தி (பாமக) - 4,31,643.
கே.என்.ராமச்சந்திரன் (அதிமுக) - 2,82,919.
வெற்றி வித்தியாசம் - 1,48,724 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்

1951 - ஓ.வி.அழகேசன் - காங்கிரஸ்.
1957 - என்.சிவராஜ் - சுயேச்சை.
1957 - ஏ.கிருஷ்ணசாமி - சுயேச்சை.
1962 - ஓ.வி.அழகேசன் - காங்கிரஸ்.
1967 - சி.சிட்டிபாபு - திமுக.
1971 - சி.சிட்டிபாபு - திமுக.
1977 - ஆர்.மோகன ரங்கம் (அதிமுக)
1980 - அன்பரசு - காங்கிரஸ்.
1984 - ஜெகத்ரட்சகன் - அதிமுக.
1989 - காஞ்சி பன்னீர் செல்வம் - அதிமுக.
1991 - எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திர குமார் - அதிமுக.
1996 - கே.பரசுராமன் - திமுக.
1998 - காஞ்சி பன்னீர் செல்வம் - அதிமுக.
1999 - ஏ.கே.மூர்த்தி - பாமக.
2004 - ஏ.கே.மூர்த்தி - பாமக.

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ஓ.வி.அழகேசன் (காங்கிரஸ்).

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்