மக்களவை தொகுதி அறிமுகம்-5: ஸ்ரீபெரும்புதூர்

Subscribe to Oneindia Tamil
Sriperumputhur
ஸ்ரீபெரும்புதூர்: தமிழகத்தின் ஐந்தாவது லோக்சபா தொகுதி ஸ்ரீபெரும்புதூர்.

தொகுதி மறு சீரமைப்பின் கீழ் இந்த தொகுதியில் இருந்த பல தொகுதிகள் மாற்றப்ப்டடு புதிய தொகுதிகள் இணைந்துள்ளன.

மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகியவையே அந்த புதிய தொகுதிகள். அதாவது ஸ்ரீபெரும்புதூரைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளும் இந்தத் தொகுதியில் புதியவை.

முன்பு இத்தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.

தற்போது மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

1967ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் இதுவரை திமுக அதிகபட்சம் 6 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 2 முறையும் வென்றுள்ளன.

இந்தத் தொகுதியும் இதுவரை திமுகவுக்கே சாதகமாக இருந்து வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த மரகதம் சந்திரசேகர் 3 முறை எம்.பியாக இருந்துள்ளார். தற்போது திமுக வசம் உள்ள இத்தொகுதியின் எம்.பியாக கிருஷ்ணசாமி உள்ளார். இவர் 2வது முறை இத்தொகுதி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்வடர்.

இதுவரை தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வந்த அமைச்சர் டி.ஆர்.பாலு இம்முறை ஸ்ரீபெரும்புதூருக்கு மாறத் திட்டமிட்டுள்ளதால் இந்தத் தொகுதி எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

கடந்த தேர்தல் நிலவரம்

ஏ.கிருஷ்ணசாமி (திமுக) - 5,17,617.
டாக்டர் வேணுகோபால் (அதிமுக) - 2,82,271.
வெற்றி வித்தியாசம் - 2,35,346 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்

1967-71 - சிவசங்கரன் (திமுக)
1971-77 - டி.எஸ். லட்சுமணன் (திமுக)
1977-80 - சீராளன் ஜெகன்னாதன் (அதிமுக)
1980-84 - நாகரத்தினம் (திமுக)
1984-89 - மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்)

1989-91 - மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்)
1991-96 - மரகதம் சந்திரசேகர் (காங்கிரஸ்)
1996-98 - நாகரத்தினம் (திமுக)
1998-99 - டாக்டர் வேணுகோபால் (அதிமுக)
1999-04 - ஏ.கிருஷ்ணசாமி (திமுக)
2004 - ஏ.கிருஷ்ணசாமி (திமுக)

முதல் தேர்தல்

நடநத ஆண்டு - 1967.
வென்றவர் - சிவசங்கரன் (திமுக)

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்