மக்களவை தொகுதி அறிமுகம்-7: அரக்கோணம்

Subscribe to Oneindia Tamil
Arakonam
அரக்கோணம்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரக்கோணம் காங்கிரஸ் கோட்டை. தற்போது பாமக வசம் உள்ளது.

அரக்கோணம் தொகுதியில் முன்பிருந்த சட்டசபைத் தொகுதிகள் - பள்ளிப்பட்டு, அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யார் ஆகியவை.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னர் அரக்கோணத்தில் இடம் பெற்றுள்ள தொகுதிகள் - திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அசைக்க முடியாத செல்வாக்குடன் திகழ்ந்தது ஒரு காலத்தில். ஜீவரத்தினம் இத்தொகுதியில், மூன்று முறை வென்றுள்ளார்.

இங்கு காங்கிரஸ் ஐந்து முறையும், தமாகா, அதிமுக, திமுக, பாமக ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

கடந்த லோக்சபா தேர்தலில் இந்தத் தொகுதி பாமக வசம் போனது. இதில் வெற்றி பெற்ற ஆர்.வேலு, ரயில்வே இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

கடந்த தேர்தல் நிலவரம்

ஆர்.வேலு (பாமக) - 3,86,911.
சண்முகம் (அதிமுக) - 2,84,715.
வெற்றி வித்தியாசம் - 1,02,196 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்

1977 - ஓ.வி. அழகேசன் - காங்கிரஸ்.
1980 - ஏ.எம்.வேலு - காங்கிரஸ்.
1984 - ஆர்.ஜீவரத்தினம் - காங்கிரஸ்.
1989 - ஆர்.ஜீவரத்தினம் - காங்கிரஸ்.
1991 - ஆர்.ஜீவரத்தினம் - காங்கிரஸ்.
1996 - ஏ.எம்.வேலு - தமிழ் மாநில காங்கிரஸ்.
1998 - சி.கோபால் - அதிமுக.
1999 - ஜெகத்ரட்சகன் - திமுக.
2004 - ஆர்.வேலு - பாமக.

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு - 1977.
வென்றவர் - ஓ.வி. அழகேசன் (காங்கிரஸ்)

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்