மக்களவை தொகுதி அறிமுகம்-8: வேலூர்

Subscribe to Oneindia Tamil
Vellore
வேலூர்: கோட்டைக்குப் பெயர் போன வேலூர் தொகுதியில் இந்த முறை சில தொகுதிகள் மாறியுள்ளன. சில சேர்ந்துள்ளன.

இத்தொகுதியில் முன்பு இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), ஆணைக்கட்டு, வேலூர், ஆரணி.

தற்போதைய தொகுதிகள் - வேலூர், அனைக்கட்டு, கீழவைத்தான்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர்.

வேலூர் தொகுதியில் காங்கிரஸே அதிக முறை வென்றுள்ளது. மொத்தம் 6 முறை வென்றுள்ளது காங்கிரஸ். அதற்கு அடுத்தபடியாக திமுக வசம் இத்தொகுதி 4 முறையும், பாமகவிடம் 2 முறையும் இருந்துள்ளது.

அதிமுகவுக்கு இங்கு ஒரு முறை மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

கடந்த தேர்தலி்ல் திமுகவே இத்தொகுதியில் வென்றது.

கடந்த தேர்தல் நிலவரம்

காதர் மொஹைதீன் (திமுக) - 4,36,642.
சந்தானம் (அதிமுக) - 2,58,032.
வெற்றி வித்தியாசம் - 1,78,610 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்

1951 - ராமச்சந்தர் - சிடபிள்யூஎல்.
1951 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - என்.ஆர்.முனியசாமி - காங்கிரஸ்.
1962 - அப்துல் வாஹித் - காங்கிரஸ்.
1967 - குசேலர் - திமுக.
1971 - உலகநம்பி - திமுக.
1977 - தண்டாயுதபாணி - என்.சி.ஓ.
1980 - ஏ.கே.ஏ. அப்துல் சமது - சுயேச்சை.
1984 - ஏ.சி.சண்முகம் - அதிமுக.
1989 - ஏ.கே.ஏ.அப்துல் சமது - காங்கிரஸ்.
1991 - அக்பர் பாஷா - காங்கிரஸ்.
1996 - பி.சண்முகம் - திமுக.
1998 - என்.டி.சண்முகம் - பாமக.
1999 - என்.டி.சண்முகம் - பாமக.
2004 - காதர் மொஹைதீன் - திமுக.

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ராமச்சந்தர் (சிடபிள்யூஎல்)

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்