மக்களவை தொகுதி அறிமுகம்-9: கிருஷ்ணகிரி

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: தமிழகத்தின் எல்லைப்புற மாவட்டமான கிருஷ்ணகிரியில் இம்முறை இரு சட்டசபைத் தொகுதிகள் ரத்தாகி, வேறு இரு தொகுதிகள் இணைந்துள்ளன.

பழைய சட்டசபைத் தொகுதிகள் - ஓசூர், தளி, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு.

தற்போதைய தொகுதிகள் - ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி.

வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோர் வென்ற பெருமைக்குரிய தொகுதி இது. காங்கிரஸ் வசம் அதிக முறை இருந்த பெருமைக்கும் உரியது. ஆறு முறை இங்கு காங்கிரஸ் வென்றுள்ளது.

திமுகவுக்கு 4 முறையும், அதிமுக 2 முறையும் இங்கு வென்றுள்ளன. தமாகா ஒரே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

கடந்த தேர்தல் நிலவரம்

இ.ஜி.சுகவனம் (திமுக) - 4,03,297.
நஞ்சே கெளடா (அதிமுக) - 2,84,075.
வெற்றி வித்தியாசம் - 1,19,222 வாக்குகள்.

இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்

1951 - சி.ஆர். நரசிம்மன் - காங்கிரஸ்.
1957 - சி.ஆர்.நரசிம்மன் - காங்கிரஸ்.
1962 - கே.ராஜாராம் - திமுக.
1967 - கமலநாதன் - திமுக.
1971 - தீர்த்தகிரி கவுண்டர் - காங்கிரஸ்.
1977 - பி.வி.பெரியசாமி - அதிமுக.
1980 - வாழப்பாடி ராமமூர்த்தி - காங்கிரஸ்.
1984 - வாழப்பாடி ராமமூர்த்தி - காங்கிரஸ்.
1989 - வாழப்பாடி ராமமூர்த்தி - காங்கிரஸ்.
1991 - கே.வி.தங்கபாலு - காங்கிரஸ்.
1996 - சி.நரசிம்மன் - தமாகா.
1998 - கே.பி. முனியசாமி - அதிமுக.
1999 - வெற்றிச்செல்வன் -திமுக.
2004 - இ.ஜி. சுகவனம் - திமுக.

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - சி.ஆர். நரசிம்மன் (காங்கிரஸ்).

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்