For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களவை தொகுதி அறிமுகம்-10: தர்மபுரி

By Sridhar L
Google Oneindia Tamil News

Darmapuri
தர்மபுரி: தமிழகத்தின் மேற்கு கோடி மாவட்டமான தர்மபுரியில் புதிதாக சில சட்டசபைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மொரப்பூர் விலக்கப்பட்டு, ஹரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகியவை இணைந்துள்ளன.

தர்மபுரி லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள புதிய சட்டசபைத் தொகுதிகள் - பாலக்கோடு, பெண்ணாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, ஹரூர் (தனி), மேட்டூர்.

பழைய சட்டசபைத் தொகுதிகள் - மொரப்பூர், தர்மபுரி, பெண்ணாகரம், மேட்டூர், தாரமங்கலம்.

வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு, தம்பித்துரை ஆகிய தலைவர்கள் நின்று வென்ற தொகுதி தர்மபுரி.

திமுக மற்றும் காங்கிரஸ் வசம் அதிக முறை இருந்த தொகுதி இது. திமுக மூன்று முறையும், காங்கிரஸ் 2 முறையும் இங்கு வென்றுள்ளன. அதிமுகவுக்கு இங்கு இருமுறை வெற்றி கிடைத்துள்ளது. மூப்பனாரின் தமாகாவும் ஒரு முறை வென்றது.

தற்போது இந்தத் தொகுதி கடந்த மூன்று தேர்தல்களாக பாமக வசம் உள்ளது. மூன்று முறையும் 3 பேர் பாமக சார்பில் எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல் நிலவரம்

ஆர்.செந்தில் (பாமக) - 3,97,540.
பு.தா.இளங்கோவன் (பாஜக) - 1,81,450.
வெற்றி வித்தியாசம் - 2,16,090 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்

1967 - சி.டி.தண்டபாணி - திமுக.
1971 - சி.டி.தண்டபாணி - திமுக.
1977 - வாழப்பாடி ராமமூர்த்தி - காங்கிரஸ்.
1980 - கே.அர்ஜூனன் - திமுக.
1984 - தம்பித்துரை - அதிமுக.
1989 - எம்.ஜி.சேகர் - அதிமுக.
1991 - கே.வி.தங்கபாலு - காங்கிரஸ்.
1996 - தீர்த்தராமன் - தமாகா.
1998 - பாரி மோகன் - பாமக.
1999 - பு.தா.இளங்கோவன் - பாமக.
2004 - ஆர்.செந்தில் - பாமக.

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு - 1967.
வெற்றி பெற்றவர் - சி.டி.தண்டபாணி (திமுக).

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X