மக்களவை தொகுதி அறிமுகம்-11: திருவண்ணாமலை

Subscribe to Oneindia Tamil
Thiruvannamalai map
திருவண்ணாமலை: கடந்த லோக்சபா தேர்தல் வரை இருந்த திருப்பத்தூர் தொகுதி ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளையும், வந்தவாசியில் இருந்த சில தொகுதிகளையும் எடுத்து திருவண்ணாமலை தொகுதியாக்கியுள்ளனர்.

அக்கினித் தலமான திருவண்ணாமலையின் பெயரில் தொகுதி உருவாகியுள்ளது, அம்மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பழைய திருப்பத்தூர் தொகுதி திமுகவின் இரும்புக் கோட்டையாக திகழ்ந்ததாகும். இங்கு நடந்த 10 தேர்தல்களில் 7 முறை திமுகவுக்கே வெற்றி என்பதை வைத்தே இத்தொகுதி மக்கள் திமுகவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு அளித்து வந்திருக்கின்றனர் என்பது புரியும். காங்கிரஸ் கட்சிக்கு 3 முறை இங்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

கடந்த தேர்தலில் திருப்பத்தூரில் திமுகவே வென்றது. வேணுகோபால், 1,80,902 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சுப்ரமணியை வீழ்த்தினார்.

திருப்பத்தூரில் 1971ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்தது. வென்றவர் திமுகவைச் சேர்ந்தவர் சின்னராஜி கவுண்டர்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவண்ணாமலையில் இடம் பெற்றுள்ள சட்டசபைத் தொகுதிகள் - ஜோலார்ப்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம்.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்