மக்களவை தொகுதி அறிமுகம்-12: ஆரணி

Subscribe to Oneindia Tamil
Arani
ஆரணி: வந்தவாசி தொகுதி ஒழிக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும் ஆரணி தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரணியில் இடம் பெற்றுள்ள சட்டசபைத் தொகுதிகள் - போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம்.

பழைய வந்தவாசி தொகுதி காங்கிரஸுக்குச் சாதகமான தொகுதி. ஐந்து முறை இங்கு காங்கிரஸ் வென்றுள்ளது. ஒருமுறை தமாகா வெற்றி பெற்றது.

திமுகவுக்கு இருமுறை இத்தொகுதி மக்கள் வாக்களித்தனர். அதிமுகவுக்கு ஒரே ஒரு முறை இங்கு வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலில் மதிமுக சார்பில் செஞ்சி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அதற்கு முந்தைய இரு தேர்தல்களில் இத்தொகுதி பாமக வசம் இருந்தது.

இங்கு 1962ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயராமன் வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலில் மதிமுகவின் செஞ்சி ராமச்சந்திரன், 1 லட்சத்து 51 ஆயிரத்து 433 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ராஜலட்சுமியை தோற்கடித்தார். மத்திய அமைச்சராகவும் பதவியேற்றார். ஆனால் பின்னர் பதவியை இழந்தார். மதிமுகவிலிருந்தும் விலக்கப்பட்டார்.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்