மக்களவை தொகுதி அறிமுகம்-13: விழுப்புரம்

Subscribe to Oneindia Tamil
Vilupuram
விழுப்புரம்: திண்டிவனம் தொகுதி ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் விழுப்புரம் எம்.பி. தொகுதியாகியுள்ளது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று விழுப்புரம். தமிழகத்தில் ஓடும் ரயில்கள் விழுப்புரத்தைத் தொடாமல் போக முடியாது என்று கூறும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகரம் விழுப்புரம். அதன் பெயரில் புதிய லோக்சபா தொகுதி உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பு வாய்ந்தது.

புதிய விழுப்புரம் தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபைத் தொகுதிகள் - திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்ப்பேட்டை.

பழைய திண்டிவனம் லோக்சபா தொகுதி, வன்னிய சமுதாயத்தினரின் முக்கியத் தலைவரான ராமசாமி படையாச்சியை இருமுறை எம்.பியாக தேர்ந்தெடுத்த பெருமை உடையது.

கடந்த தேர்தலி்ல் திண்டிவனத்தில் பாமகவின் தன்ராஜ் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் அருண்மொழித் தேவனை 91 ஆயிரத்து 164 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் தன்ராஜ்.

பழைய திண்டிவனம் தொகுதியில், 7 முறை வென்று காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து திமுக மற்றும் மதிமுக ஆகியவை தலா இரு முறை இங்கு வென்றுள்ளன.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்