மக்களவை தொகுதி அறிமுகம்-15: சேலம்

Subscribe to Oneindia Tamil
Salem
சேலம்: சேலம் லோக்சபா தொகுதியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

திருச்செங்கோடு தொகுதியில் இதுவரை இருந்து வந்த எடப்பாடி சேலம் தொகுதிக்கு வந்துள்ளது.

சேலம் தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபைத் தொகுதிகள் - ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி.

சேலம் தொகுதி காங்கிரஸின் கோட்டை. இங்கு நடந்த தேர்தல்களில் இதுவரை 7 முறை வென்றுள்ளது காங்கிரஸ். திமுகவுக்கு 3 முறையும், அதிமுகவுக்கு 2 முறையும் வெற்றி கிடைத்தது.

ரங்கராஜன் குமாரமங்கலம், கு.ராஜாராம், வாழப்பாடி ராமமூர்த்தி, தங்கபாலு, செல்வகணபதி ஆகிய முக்கிய அரசியல் தலைவர்கள் இங்கு வென்றுள்ளனர். இதில் ரங்கராஜன் குமாரமங்கலம் 3 முறை எம்.பியாகியுள்ளார்.

சேலம் தொகுதிக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளின் உறுப்பினர்கள் விவரம்

ஓமலூர் - தமிழரசு (பாமக)
எடப்பாடி - காவேரி (பாமக)
சேலம் 1 - ரவிச்சந்திரன் (அதிமுக)
சேலம் 2 - எஸ்.ஆறுமுகம் (திமுக)
வீரபாண்டி - ராஜேந்திரன் (திமுக)

கடந்த தேர்தல் நிலவரம்

தங்கபாலு (காங்கிரஸ்) - 4,44,591.
ராஜசேகரன் (அதிமுக) - 2,68,964.
வெற்றி வித்தியாசம் - 1,75,627 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்

1952-57 - எஸ்.வி.ராமசாமி - காங்கிரஸ்.
1957-62 - எஸ்.வி.ராமசாமி - காங்கிரஸ்.
1962-67 - எஸ்.வி.ராமசாமி - காங்கிரஸ்.
1967-71 - கே.ராஜாராம் - திமுக.
1971-77 - இ.ஆர்.கிருஷ்ணன் - திமுக.
1977-80 - ப.கண்ணன் - அதிமுக.
1980-84 - சி.பழனியப்பன் - திமுக.
1984-89 - ரங்கராஜன் குமாரமங்கலம் - காங்கிரஸ்.
1989-91 - ரங்கராஜன் குமாரமங்கலம் - காங்கிரஸ்.
1991-96 - ரங்கராஜன் குமாரமங்கலம் - காங்கிரஸ்.
1996-98 - ஆர்.தேவதாஸ் - தமாகா.
1998-99 - வாழப்பாடி ராமமூர்த்தி - சுயேச்சை.
1999-04 - டி.எம். செல்வகணபதி - அதிமுக.
2004 - கே.வி.தங்கபாலு - காங்கிரஸ்.

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு - 1952.
வென்றவர் - எஸ்.வி.ராமசாமி (காங்கிரஸ்).

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்