சமரவீரா சதம்-நியூசிலாந்தை வென்றது இலங்கை

 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

கொழும்பு: சமரவீரா சதம் கடந்து அசத்த நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை 97 வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடக்கிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது.

இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக வந்த தில்ஷன்(4), ஜெயசூர்யா(7) ஜோடி விரைவில் அவுட்டாகி ஏமாற்றமளித்தது. அடுத்த வந்த ஜெயவர்தனா டக் அவுட்டானார். சங்ககரா 18, கந்தம்பி 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். இலங்கை 69 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.

இந்நிலையில் களமிறங்கிய சமரவீரா பொறுப்புடன் விளையாடி அணியி்ன் மானத்தை காத்தார். அவர் 124 பந்தில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த மேத்திவ்ஸ் அரைசதம் கடந்தார். இலங்கை 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து, இலங்கை வீரர்களை விட படுமட்டமாக விளையாடியது. நியூசிலாந்து 36.1 ஓவரில் 119 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி 97 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதிகபட்சமாக எலியாட் 41, பட்லர் 25 ரன்கள் எடுத்தனர். இலங்கை சார்பில் சிறப்பாக பந்துவீசிய மலிங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.

Write a Comment
AIFW autumn winter 2015