ஏர் இந்தியா விமானிகள் அடையாள எதிர்ப்பு ஊர்வலம்!

இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்டுகள் இன்று ஒரு நாள் அடையாள அமைதி ஊர்வத்தில் ஈடுபடுகின்றனர்.

தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை நிறுத்தாமல் முழுமையாகவும் சரியான நேரத்திலும் வழங்கக் கோரி இந்த ஊர்வலத்தை நடத்துகின்றனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 24 ம் தேதி முதல் முழுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானிகள் அறிவித்திருந்தனர்.

இப்போது நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அடையாள எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்துகின்றனர். கோரிக்கைகள் உடனடியாக ஏற்கப்பட்டால் நவம்பர் 24 ம் தேதி போராட்டம் வாபஸ் பெறப்படும் என அறிவித்துள்ளனர்.

ஏர் இந்தியா நிறுவனம் தொடர் நஷ்டத்தில் இயங்குவதால் கடந்த 3 மாதங்களாக சரியான நேரத்துக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்பது ஊழியர்களின் குற்றச்சாட்டு.

Please Wait while comments are loading...

Videos