For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கே.ஜி. படுகை எரிவாயு: தமிழகத்தை ஒதுக்கிய மத்திய அரசு

By Staff
Google Oneindia Tamil News

Offshore plant
சென்னை:​ கிருஷ்ணா- ​கோதா​வரி படு​கை​யில் உற்​பத்​தி​யா​கும் இயற்கை வாயுவில் தமிழகத்துக்கும் பங்கு வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிர​த​மர் மன்​மோ​கன் சிங்​குக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதத்தி்ல்,

நாட்​டின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தியை அதி​க​ரிக்​கும் மாநி​லங்​க​ளில் தமி​ழ​கம் நான்​கா​வது இடத்தை வகிக்​கி​றது.​ மேலும்,​ தொழில் வளர்ச்​சி​யில் முன்​னணி மாநி​ல​மா​க​வும் விளங்கி வரு​கி​றது.​

த​மி​ழ​கத்​தின் இரண்டு பெரிய உரத் தொழிற்​சா​லை​க​ளாக இருப்​பவை மெட்​ராஸ் பெர்​டி​லை​ஸர்ஸ் மற்​றும் ஸ்பிக் ஆகி​ய​ன​வா​கும்.​ இவை உர உற்​பத்​திக்கு நாப்​தாவை போன்ற பொருள்​களை நம்பி இருக்​கின்​றன. நாப்​தா​வின் விலை உயர்​வால், யூரியா, டை-​அமோ​னி​யம் பாஸ்​பேட் ஆகி​ய​வற்​றின் தயா​ரிப்பை ஸ்பிக் நிறு​வ​னம் நிறுத்தி வைத்​துள்​ளது.​ இத​னால்,​தமி​ழ​கத்​தில் போது​மான அள​வுக்கு யூரியா கிடைப்​ப​தில்லை.​

இயற்கை எரி​வாயு தேசத்​தின் சொத்து...

கிருஷ்ணா-​கோதா​வரி படு​கை​யில் உற்​பத்தி செய்​யப்​ப​டும் இயற்கை எரி​வாயு மற்ற மாநி​லங்​க​ளுக்கு ஒதுக்​கீடுசெய்​யப்​பட்​டுள்​ளது. ஆனால்,​ தமி​ழ​கத்​துக்கு சுத்​த​மாக எந்த ஒதுக்​கீ​டும் இல்லை.​

இந்த விஷ​யத்​தில்,​​ தமி​ழ​கத்​தின் நலன் மொத்​த​மாகபுறக்​க​ணிக்​கப்​பட்​டுள்​ளது.​ கிருஷ்ணா-​கோதா​வரி படு​கை​யில் உற்​பத்​தி​யா​கும் இயற்கை எரி​வாயு தேசத்​தின் சொத்து;​ அதை,​அனைத்து மாநி​லங்​க​ளுக்​கும் சம​மான வகை​யில் பங்​கிட வேண்​டும்.​

கி​ருஷ்ணா-கோதா​வரி படு​கை​யில் இருந்து தனி​யார் துறை மூலம் இயற்கை எரி​வா​யுவை இரண்டு குழாய்​கள் வழியே தூத்​துக்​குடி வரை கொண்டு செல்ல மத்​திய அரசு ஒப்​பு​தல் அளித்​துள்​ளது.​

அடுத்த பத்​தாண்​டு​க​ளில் தமி​ழ​கத்​தின் எரி​வாயு தேவை​யின் அளவு ஆண்​டுக்கு 9 சத​வீ​த​மாக அதி​க​ரிக்​கும் எனமதிப்​பி​டப்​பட்​டுள்​ளது.​

எ​னவே, ​தமி​ழ​கத்​தில் உள்ள இரண்டு உரத் தொழிற்​சா​லை​கள்,​​ புதி​தாக வர​வி​ருக்​கும் அனல் மின் நிலை​யங்​கள் ஆகி​ய​வற்​றுக்​குத் தேவை​யான எரி​வா​யுவை கிருஷ்ணா-​கோதா​வரி படு​கை​யில் இருந்து மத்​திய அரசு வழங்​கிட வேண்​டும்.​இந்​தப் பிரச்​னை​யில் பிர​த​மர் மன்​மோ​கன் சிங் உட​ன​டி​யா​கத் தலை​யிட்டு,​​ தமி​ழ​கத்​துக்கு சாத​க​மான நிலையைஏற்​ப​டுத்​தித் தர வேண்​டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X