For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டீசல் விலை உயர்வு: வாடகையை உயர்த்துவோம்- லாரி உரிமையாளர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: டீசல் விலை உயர்ந்துள்ளதால் லாரி வாடகையை அதிகரிக்கப் போவதாக லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

20 சதவீத அளவுக்கு வாடகை உயர்வு இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுகுமார் கூறுகையில்,

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் ஏற்கனவே விலைவாசி உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இப்போது மீண்டும் பெட்ரோலுக்கு 3 ரூபாயும், டீசலுக்கு ரூ.2.80-ம் உயர்ந்துள்ளதால் மேலும் விலைவாசி அதிகரிக்கும்.

வெளிமாநில லாரி வாடகை 20 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்குள் ஓடும் லாரி வாடகை 10 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.

இதனால் பழைய வாடகையில் லாரியை ஓட்ட முடியாது. பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க லாரி அதிபர்கள் ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட விலை உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும். அப்போதுதான் லாரி வாடகையும் குறையும், விலைவாசியும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இன்னும் சில மாதங்களில் பெட்ரோல்-டீசல் விலையை மீண்டும் உயர்த்துவார்கள் என்ற கருத்து உள்ளது. அதையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து ஆலோசிக்க அகில இந்திய அளவில் லாரி அதிபர்கள் சங்க கூட்டம் டெல்லியில் 5ம் தேதி நடக்க உள்ளது.

மார்ச் 31ம் தேதிக்குள் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X