குற்றாலம் ஐந்தருவி பகுதியில் புலி நடமாட்டம்!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: குற்றாலம் ஐந்தருவி பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை உயிரினங்கள் பல உள்ளன. எறும்பு திண்ணி, கோழைஆடு, பறக்கும் அணில், மான், முள் எலி, மர நாய் உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது பிடிபடுவது வழக்கம்.

குற்றாலம் மலைப்பகுதியை ஓட்டியுள்ள முண்டாந்துறையில் புலிகள் சரணாலயம் உள்ளது. சமீபத்தில் இங்கு புலிகள் குறித்து கணக்கெடுப்பு நடந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் செண்பகாதேவி அருவி பகுதிக்கு சென்ற சிலர் அங்கு புலியின் நடமாட்டத்தை பார்த்ததாக தகவல் வெளியானது. இதே போல் கடந்த இரண்டு தினங்களாக ஐந்தருவி பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு நின்ற நாயை பிடிக்க புலி எத்தனித்துள்ளது. இதனால் நாய் மரண பயத்தில் வித்தியாசமாக சத்தம் எழுப்பியதால் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளனர்.

அப்போது புலி போன்ற உருவம் வனப்பகுதிக்குள் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாள் இதுபோன்ற புலி தென்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...