அப்பாவி தமிழர்களை கொன்ற இலங்கை ராணுவம்-யுஎஸ் மனித உரிமை அமைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக்க மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்கி, அங்கு அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் போகச் சொன்னது. பின்னர் அங்கு வந்து குவிந்த அப்பாவி மக்களை குண்டுகளை வீசி குவியல் குவியலாக கொன்று குவித்தது.

இத்தாக்குதல் பற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிந்த போதிலும், அவர்கள் அதைத் தடுக்கவில்லை. இந்த விதிமீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்துக்குமார் பாசறை இன்று தொடங்கப்படுகிறது. இதேபோல முத்துக்குமார் குறித்து திருமாவளவன் எழுதிய பாடலையும் இன்று அக்கட்சி வெளியிடுகிறது.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...