செம்மொழி மாநாட்டுக்கு அப்துல் கலாமுக்கு அழைப்பில்லையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் இன்று கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஒரு முக்கிய நபர் குறித்து கிட்டத்தட்ட பலரின் வாய்களும் முனுமுனுத்தன - அவர் அப்துல் கலாம்.

முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பற்றுடன் கூடிய அவர் ஏராளமான கவிதைகளைப் படைத்தவர். திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் இசையிலும் பெரும் நாட்டம் படைத்தவர்.

ஆனால் இன்று தொடங்கிய செம்மொழி மாநாட்டில் அவரைக் காணவில்லை. தொடக்க விழாவுக்கு அவரும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முனுமுனுப்பு பெரிதாக எழுந்துள்ளது.

கலாமுக்கு அழைப்பு அழைப்பப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. எப்படி இருப்பினும் கலாம் இன்று காணப்படாதது, பலரிடமும் கேள்விளை எழுப்பியுள்ளது.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...