நாகரீகமே தெரியாதவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்-புறக்கணிக்க வேண்டும்: கங்குலி பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ganguly
கொல்கத்தா: ஒரு ஆடுகளத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். இவர்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாய்ந்துள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி.

வீரேந்திர ஷேவாக் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வேண்டும் என்றே நோ பால் போட்டு அசிங்கமாக நடந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கதை நாறிப் போயுள்ளது. அனைத்து முன்னாள், முன்னணி வீரர்களும் இலங்கையை கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்த நிலையில் செளரவ் கங்குலி இதுகுறித்துக் கூறுகையில்,

விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை வீரர்கள் எப்போதுமே நாகரீகம் தெரியாதவர்கள். வெற்றி பெறும்போது ஆர்ப்பரிக்கும் அவர்கள் தோற்கும் நிலையில் இருந்தால், எது வேண்டுமானாலும் செய்வார்கள்.

ஷேவாக் சதம் அடிக்கக்கூடாது என்று வேண்டுமென்றே நோபால் வீசி கிரிக்கெட்டை அவமதித்து விட்டார்கள். கேப்டன் மற்றும் சகவீரர்கள் சொல்லாமல் ரந்தீவ் அப்படி செய்திருக்க மாட்டார்.

ஒருமுறை கண்டி டெஸ்டில் நான் 98 ரன் எடுத்திருந்தேன். அப்போதும் நோ பால் வீசி என்னை சதம் அடிக்க விடாமல் தடுத்தனர்.

சச்சின் டெண்டுல்கர் ஒரு போட்டியில் 98 ரன்கள் எடுத்திருந்தபோதும் இதேபோலதான் செய்தனர்.

இப்படிப்பட்ட வீரர்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார் கங்குலி.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...