சிகாகோ விமான நிலையத்தில் தடு்க்கப்பட்ட பிரபுல் படேல்

By:
Subscribe to Oneindia Tamil

Praful Patel
சிகாகோ:  கனடா செல்லும் வழியில் சிகாகோ விமான நிலையம் வந்திறங்கிய மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பிரபுல் படேலை அந நாட்டு குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள பெயருடன் பிரபுல் படேலின் பெயர் ஒத்திருந்ததால், அவரை அதிகாரிகள் தனியே அழைத்துச் சென்று விசாரிக்க ஆரம்பித்தனர்.

தான் இந்திய அமைச்சர் என்று கூறிய பின்னரும் விசாரணை தொடர்ந்தது. இது குறித்து தகவல் அறிந்து அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் உடனே நடவடிக்கைகளி்ல் இறங்கி பிரபுல் படேலை அந்த நிலைமையிலிருந்து மீட்டது.

இந்த சம்பவத்துக்காக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் பிரபுல் படேலிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடக்கும் சர்வதேச விமானப் போக்குவரததுக் கழகத்தின் கூட்டத்தில் பங்கேற்க அரசுமுறைப் பயணமாக படேல் அங்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்தது.

Please Wait while comments are loading...