காமன்வெல்த் போட்டி: சிறந்த வீராங்கனை பட்டியலில் சாய்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Saina Nehwal
டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீராங்கனையைத் தேர்வு செய்து லண்டனில் வழங்கப்படும் விருதுக்கான இறுதிப் பட்டியில் சாய்னா இடம் பிடித்துள்ளார்.

அன்மையில் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. இதில் பல நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தங்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டிகளில் விளையாடிய வீராங்கனைகளில் சிறப்பாக விளையாடியவருக்கு லண்டனில் சிறந்த வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. இதற்கான இறுதிப் பட்டியலில் 3 வீராங்கனைகளின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் பெயரும் அடக்கம்.

இங்கிலாந்து தடகள வீராங்கனை ஜெசிகா எனிஸ், ஸ்காட்லாந்து துடுப்பு படகு வீராங்கனை காத்ரின் ஆகியோரின் பெயரும் அதில் உள்ளது. இவர்களில் யார் சிறந்த வீராங்கனைக்கான விருது பெறுவார் என்பது இன்று தெரியும்.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்