Englishবাংলাગુજરાતીहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు
Filmibeat

50 பெண்களை கற்பழித்த கொலைகார 'சைகோ': சுட்டுப் பிடிக்க தீவிரம்

Posted by:
Published: Thursday, April 28, 2011, 18:04 [IST]
 

கோவை: 50க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து, அதில் பல பெண்களைக் கொலை செய்துள்ள காம கொடூரனை சுட்டுப் பிடிக்க கோவை போலீஸ் தனிப் படையினர் பெங்களூர் விரைந்துள்ளனர்.

எடப்பாடியைச் சேர்ந்த ஜெய்சங்கர் (32) திருப்பூர் சுற்றுப்புறப் பகுதியில் பெண் போலீஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

காவல் நீட்டிப்புக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று விட்டு திரும்பி வரும் வழியில் தப்பிவி்ட்டான். இதையடுத்து அவனது பாதுகாப்பிற்கு சென்ற கோவை ஆயுதப்படை போலீஸ் சின்னசாமி மனம் உடைந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து ஜெய்சங்கரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. அவனைப் பற்றி அண்டை மாநில போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இந் நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 6 பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டனர். இதை ஜெய்சங்கர் தான் செய்திருப்பான் என்று சந்தேகித்த பெங்களூர் போலீசார், கோவை வந்து தகவல் சேகரித்துச் சென்றனர்.

டிரைவராக வாழ்க்கையைத் தொடங்கிய ஜெய்சங்கர் மினி பஸ், டவுன் பஸ் மற்றும் பல்வேறு ரூட் பஸ்களிலும், சங்ககிரியில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் லாரிகளிலும் டிரைவராக வேலை பார்த்துள்ளான்.

பெண்கள் விஷயத்தில் படு மோசமான இவன், 13 வயதிலேயே பஞ்சாயத்து தலைவர் மனைவியை கற்பழிக்க முயன்று பிடிபட்டு ஊர் பஞ்சாயத்தில் அபராதம் கட்டியிருக்கிறான். பஸ் டிரைவராக இருந்தபோது போலீஸ்காரர் மனைவி இந்திரா காந்தியை தங்காயூர் காட்டுப் பகுதிக்கு கூட்டி சென்று கற்பழித்து கொலை செய்தான். அந்த வழக்கில் தான் முதன்முதலில் இவன் கைதாகி சிறை சென்றான். ஆனால், வெளியில் பின்னரும் ஏராளமான பெண்களை கற்பழித்துள்ளான்.

பலர் அவமானம் கருதி புகார் கொடுக்கவில்லை. தொப்பூர் தொப்பராயக்கன் பட்டியில் ஒரு கிழவியை கொலை செய்து நகை பறித்துள்ள இவன், பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் தனியாக நடந்து வந்த பெண்ணை கற்பழித்து நகையை பறித்துள்ளான்.

அதே தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூர் காளிபாளையத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கற்பழித்து நகையை பறித்துள்ளான். தொப்பூர் பகுதியில் பண்ணையில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண்ணின் செயினை பிடுங்கி கற்பழித்துள்ளான்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பத்தலபள்ளியில் மோட்டார் சைக்கிளில் 40 வயது பெண்ணுக்கு லிப்ட் கொடுத்து காட்டுப் பகுதிக்குக் கூட்டி சென்று கற்பழித்து கொலை செய்துள்ளான். தீவட்டிபட்டியில் கை குழந்தையுடன் அதிகாலை வேளையில் பஸ்சில் இருந்து இறங்கிய பெண்ணை வாயை பொத்தி தூக்கிச் சென்று கெடுக்க முயன்றான். குழந்தை அழுததால் அதன் தலையில் வெட்டிவிட்டு ஓடிவிட்டான்.

பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அலுவலகம் திரும்பிய பெண் போலீஸ் ஒருவரை லிப்ட் கொடுப்பதாக அழைத்து சென்று கொலை செய்து கற்பழித்துள்ளான்.

கடைசியாக பெண் போலீசிடம் பறித்துச் சென்ற செல்போன் மூலம் போலீசில் பிடியில் சிக்கினான். ஆனால், நீதிமன்றத்திலிருந்து திரும்பி வரும்போது தப்பிவிட்டான்.

திருப்பூர், பெருமாநல்லூர், கிருஷ்ணகிரி, சேலம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 50கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்துள்ள காமகொடூரன் ஜெய்சங்கரை சுட்டுப்பிடிக்க கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக தனிப்படை போலீசார் கர்நாடகம் வந்துள்ளனர்.

English summary
Coimbatore police has decided to shoot a rapist named Jaishankar who has raped more than 50 women. He ia believed to be in Karnataka, so special force has left for Bangalore.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter