For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபைத் தேர்தல் 2011: கூட்டணிகள், கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்

By Chakra
Google Oneindia Tamil News

karunanidhi and Jayalalitha
சென்னை: ஏப்ரல் 13ம் தேதி நடந்த தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்த ஒரு பார்வை.

வழக்கம் போல திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியுமாக இந்த தேர்தலை தமிழக கட்சிகள் சந்தித்தன. பாஜக தனி அணி அமைத்துப் போட்டியிட்டது.

கட்சி ஆரம்பித்தது முதல் தனித்தே போட்டியிட்டு வந்த தேமுதிக முதல் முறையாக கூட்டணி அரசியலில் குதித்தது. அதிமுக கூட்டணியில் இணைந்து அது போட்டியிட்டது.

கட்சி ஆரம்பித்தது முதல் ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்தோ அல்லது தனித்தோ போட்டியிட்டு வந்த மதிமுக முதல் முறையாக இந்த தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தது- அதிமுக செய்த துரோகத்தால்.

அதிமுக கூட்டணி:

அதிமுக கூட்டணி இந்த முறை சற்றே பெரிதாக இருந்தது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்

அதிமுக
தேமுதிக
மார்க்சிஸ்ட் கம்யூ.
இந்திய கம்யூ.
மனித நேய மக்கள் கட்சி
இந்திய குடியரசுக் கட்சி
புதிய தமிழகம்
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
சமத்துவ மக்கள் கட்சி
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம்

திமுக கூட்டணி:

திமுக
காங்கிரஸ்
பாமக
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்
பெருந்தலைவர் மக்கள் கட்சி

பாஜக கூட்டணி:

பாஜகவும் இந்த முறை ஒரு கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டது.

பாஜக கூட்டணியில், சுப்பிரமணியம் சாமியின் ஜனதாக் கட்சி, ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

நடிகர் கார்த்திக்:

நடிகர் கார்த்திக்கை கடைசி நேரம் வரை அதிமுக கண்டு கொள்ளாமல் புறக்கணித்ததால், அவர் கொதிப்படைந்து தனது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்தார். அதன்படி அவரது கட்சியும் சில இடங்களில் போட்டியிட்டது. வழக்கம் போல பல வேட்பாளர்கள் திடீர் திடீரென மாயமானார்கள், அதிமுகவில் போய்ச் சேர்ந்தார்கள். வழக்கம் போல கார்த்திக்கும் ஒன்றும் புரியாமல் முழித்தார்.

அதை விட முக்கியமாக இந்தத் தேர்தலில் அவர் பிரசாரமே செய்யவில்லை என்பதுதான். பிரசாரத்திற்குப் போகாமலேயே கடைசி வரை சென்னையிலேயே இருந்து கொண்டு வித்தியாசமாக இந்த தேர்தலை 'டீல்' செய்தார் கார்த்திக்.

பிற கட்சிகள்:

இவை தவிர பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டணியாகப் போட்டியிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்துப் போட்டியிட்டது. புரட்சி பாரதம் கட்சியும் தனியாக போட்டியிட்டது.

யார் யார் எத்தனை இடங்களில் போட்டி?:

அதிமுக கூட்டணி

அதிமுக - 160
தேமுதிக - 41
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 12
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 10
மனித நேய மக்கள் கட்சி - 3
புதிய தமிழகம் - 2
இந்திய குடியரசுக் கட்சி - 1
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் - 1
பார்வர்ட் பிளாக் - 1
சமத்துவ மக்கள் கட்சி - 2
கொங்கு இளைஞர் பேரவை - 1

திமுக கூட்டணி

திமுக - 119
காங்கிரஸ் - 63
பாமக - 30
விடுதலைச் சிறுத்தைகள் - 10
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் - 7
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1
பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1

English summary
As usual TN witnessed two major alliances in this assembly polls under DMK and ADMK. Vijayakanth's DMDK, for the frst time alligned with ADMK. BJP contested alone with Janatha party. Indhya Jananayaga katchi led the third front.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X