For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்களை வரவேற்கிறோம்! - சீமான்

By Shankar
Google Oneindia Tamil News

Seeman
வேலூர்: "தமிழக முதல்வர் அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்களை வரவேற்கிறோம்," என இயக்குநர் சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சி நிறுவனரும் இயக்குநருமான சீமான் நேற்று வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

2009-ம் மே மாதம் 18-ந்தேதி இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை தினத்தை லண்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் தேசிய துக்க தினமாக கடைப்பிடித்து வருகிறது. வீழ்ந்ததெல்லாம், அழுவதற்காக அல்ல, எழுவதற்காகவே என்பதை வலியுறுத்தி வேலூரில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்துகிறோம்.

மக்கள் மீது அக்கறையற்ற மத்திய அரசு

பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அந்த அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என அறிவிக்க வேண்டும், இலங்கைக்கு பொருளாதார தடைவிதிக்க வேண்டும் என்று முன்பு, தற்போது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

இதையே அவர் சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிட வேண்டும். இதையே நாங்கள் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற உள்ளோம்.

வரவேற்பு:

தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கவை. இதற்காக முதல்வரை பாராட்டுகிறோம்", என்றார்.

English summary
Naam Tamilar leader Seeman welcomed CM Jayalalitha's various people welfare schemes announced on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X