For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் இன்று முதல் 4 நாட்களுக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தம்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: தெற்கு மும்பையில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் குழாய்கள் சீரமைக்கும் பணி காரணமாக தெற்கு மும்பையில் இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. பகுதிக்கு தகுந்த மாதிரி 25 முதல் 100 சதவீதம் வரை தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

3 ஆயிரம் மிமீ மாரோஷி-வகோலா-மாஹிம்-ரூபாரேல் சுரங்கப் பாதை திட்டத்தின்கீழ் குழாய்கள் அமைக்கப்படுகிறது. இதனால் தான் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

கபே பரேட், கொலாபா, சாபுசித்திக் ரோடு பகுதி, நவி பகுதி, மலபார் ஹில்ஸ், பெட்டர் ரோடு மற்றும் கார்மைக்கேல் ரோடு ஆகிய பகுதிகள் இன்றும், வரும் 20-ம் தேதியும் தண்ணீர் வினியோகம் 100 சதவீதம் நிறுத்தப்படும்.

நரிமன் பாயிண்ட், மரைன் லைன்ஸ், மரைன் டிரைவ், பேக்பே ரிக்லமேஷன், போர்ட் மற்றும் சர்ச்கேட் பகுதி, கல்பாதேவி, சி பி டேங்க், கிர்காம், தாகுர்த்வார், மும்பை சென்ட்ரல், கேட்வாடி, தார்தியோ, பாபுல்நாத், வால்கேஷ்வர், போர்ஜீத் தெரு, பூலாபாய் தேசாய் ரோடு, நெபியன் சீ ரோடு, மகாலக்ஷ்மி கோயில் பகுதிகளில் வரும் 19, 21 ஆகிய தேதிகளில் தண்ணீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்படும்.

இந்த 4 நாட்களும் தாதார், என். எம். ஜோஷி மார்க், அந்தேரி (கிழக்கு), அந்தேரி (மேற்கு), ஓஷிவாராவில் தண்ணீர் வினியோகம் 25 சதவீதம் நிறுத்தப்படும்.

English summary
South Mumbai is facing water cut for four days from today because of the repair work by the local governing body. The water cut will vary from 25 to 100% depending upon the area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X