இந்தியா நெருக்கடி தரவில்லை: ராஜபக்சே

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

இந்தியா நெருக்கடி தரவில்லை: ராஜபக்சே
கொழும்பு: இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை அளிப்பது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து தமக்கு நெருக்கடி எதுவும் இல்லை என்று அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிப்பதற்காக மட்டுமே வந்தனர் என்றும், தமக்கு அவர்கள் எந்த நெருக்கடியும் தரவில்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள் மூவரும் இந்த மாதத் தொடக்கத்தில் கொழும்பு சென்றிருந்தனர்.

அவர்களின் வருகை குறித்த கேள்விக்கு ராஜபக்சே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

English summary
Sri Lankan president Rajapaksa told that India hasn't give any pressure to him on political solution to Sri Lankan Tamils.
Write a Comment
AIFW autumn winter 2015