For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் 7.3 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை: மருத்துவர்கள் வியப்பு

By Siva
Google Oneindia Tamil News

Texas Baby
டெக்சாஸ்: அமெரிக்காவில் ஒரு பெண் 7.3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜானட் ஜான்சன். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜானட்டை பிரசவத்திற்காக லாங்வியூவில் உள்ள குட் ஷெபர்ட் மருத்துவக் கழகத்தில் சேர்த்தனர். கடந்த 8-ம் தேதி அவருக்கு 7.3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.

அந்த பெரிய குழந்தைக்கு ஜாமைக்கேல் பிரவுன் என்று பெயரிட்டுள்ளனர். குழந்தையைப் பார்த்து மருத்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் பார்த்த பெரிய பச்சிளம் குழந்தைகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்தனர்.

ஜானட் கற்பகமாக இருக்கையில் குழந்தை 5.5 கிலோ எடையுடன் பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் கூற்றை பொய்யாக்கிவிட்டு குழந்தை 7.3 கிலோ எடையுடன் பிறந்தது. இது ஜானட்டின் 4-வது குழந்தை ஆகும்.

ஜானட் தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பே அதற்கு ஏராளமான ஆடைகள் வாங்கி வைத்திருந்தார். தற்போது பிறந்துள்ள பெரிய குழந்தைக்கு அது சரியாக இருக்காது என்பதால் அவற்றைத் திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

அந்த மருத்துவமனையில் உள்ள அனைவரும் வந்து ஜானட்டின் குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

டெக்சாஸ் மாகாணத்திலேயே 7.3 கிலோ எடையுடன் குழந்தை பிறத்திருப்பது இது தான் முதல் முறை. இருப்பினும் அதனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற முடியாது. ஏனென்றால், 1879-ம் ஆண்டு ஒஹாயோவில் 10. 43 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை தான் இதுவரை உலகின் அதிக எடையுடன் பிறந்த குழந்தையாக கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் உள்ளது.

English summary
A woman named Janet Johnson has given birth to a baby boy weighing 7.3 kg in Texas. It is the biggest new born in Texas province. Doctors said that it is one of the biggest newborn they have ever seen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X