For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு- ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் அரசு கேபிள் டிவி சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் சென்னையில் மட்டும் இது தொடங்கப்படவில்லை.

ரூ. 70 என்ற குறைந்த கட்டணத்திற்கு 90 சேனல்கள் வரை இந்த கேபிள் டிவி மூலம் வழங்கப்படும். இந்த 70 ரூபாயில், 20 ரூபாயை, கேபிள் டிவி நிறுவனங்கள், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

முதலில் இலவச சேனல்களை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக கட்டணச் சேனல்களும் இதில் சேர்க்கப்படவுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தின்போது அரசு கேபிள் நிறுவனம் தொடர்பாக ஜெயலலிதா அறிவித்திருந்தார். இருந்தாலும் அப்போதைய ஆளுநரின் ஒத்துழைப்பின்மை மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாக அது நிறைவேறவில்லை. இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியினபோது அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால் தொடங்கிய வேகத்திலேயே அதை மூடி விட்டார்கள்.

தற்போது மீண்டும் அத்திட்டத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் மொத்தம் 34,344 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் மூலம் 1.45 கோடி வீடுகளுக்கு அரசு கேபிள் டிவி சேவை சென்றடையும்.

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இந்த ஒளிபரப்பு சேவையை தொடங்கி வைத்ததும், வேலூரில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மையத்திலிருந்து அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.

மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் சார்பாக தயாரிக்கப்பட்ட வீடியோ தொகுப்பு ஒன்று சென்னை கோட்டையில் வெளியிடப்பட்டது. அதில் "குறைந்த கட்டணம் நிறைந்த சேவை' என்ற வாசகங்களுடன் விளம்பரம் வெளியிடப்பட்டது.

இதில் ஏற்கனவே வசூலித்ததை விட பாதிக்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. நிறைய சேனல்கள் பார்க்கலாம். மாதம் ரூ.70 கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டிய நிலையில் மீதமுள்ள பணத்தை சேமித்து வைக்கலாம் என்று ஒரு குடும்பத்தில் உள்ள தாயும் அவரது மகளும் பேசிக்கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றன.

பின்னர் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் ஒளிபரப்பை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து பேசினார். அப்போது முதல்வர் கூறுகையில்,

தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் கேபிள் டிவி ஒளிபரப்பை இன்று தொடங்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

கேபிள் இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோகம் செய்து பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வந்தனர். ஒரு குடும்பத்தினரின் இந்த ஏகபோக செயலினால் அதிக லாபம் ஈட்டி வந்தனர்.

எனவேதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் இந்த ஏகபோக நிலை தடுக்கப்பட்டு அனைவரும் கேபிள் டிவி தொழில் செய்வதற்குரிய வாய்ப்புகள் வழங்கப்படும், அனைத்து மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தோம்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஒளிபரப்பை தொடங்குகிறது. குறைந்த செலவில் நிறைந்த சேவையினை இந்நிறுவனம் வழங்கும். தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷனுடைய உறுப்பினர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் மூலம் இந்த தொலைக்காட்சி சேவை நடைபெறும். இதற்கு சந்தா தொகையாக பொது மக்களிடம் ரூ.70 மட்டுமே வசூலிக்கப்படும்.

இதன் மூலம் அரசு கேபிள் டிவியின் இணைப்பு பெற்ற ஒவ்வொருவரும் மாதம் ரூ.70 முதல் ரூ.100 வரையிலும் சேமிக்கலாம். தமிழக மக்களும் குறைந்த கட்டணத்தில் இணைப்பு பெறுவதில் மனமகிழ்ச்சி அடைவார்கள். இந்த நல்ல நாளில் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும் பொது மக்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் முதல்வர்.

English summary
CM Jayalalitha today launched Arasu cable TV service. She launched the service from Chennai through Video conferencing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X