For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரூரில் சிக்கிய ரூ.46,60,000 பணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் உள்ள ஒரு பிரபல ஆட்டோ பைனான்ஸ் நிறுவனத்தில் கணக்கில் இல்லாத 46,60,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் பொன்மகள் என்ற பெயரில் ஆட்டோ பைனான்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முறையாக பதிவு பெறாமல் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த நிதி நிறுவனத்தில் அதிக அளவிலான நிதியை கையாளப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நாகராஜன் உத்தரவின் பெயரில் கரூர் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையிலான போலீசார் பைனான்நிதி நிறுவனத்தை முற்றிகையிட்டு சோதனை திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 46,60,190 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், பல முக்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

இந்த நிதி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றிய சிவக்குமார் என்பவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹலாலா முறையில் இந்த பணப்பறிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Karur police have seized Rs.46,60,000, from a Auto finance company. Some documents also seized along with that. Police investigation is going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X