தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களை தவிர்க்க புதுதிட்டம்: 27ம் தேதி முதல் அமல்

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

டெல்லி: மொபைல் போனில் வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,களை தவிர்க்க மத்திய அரசு எடுத்துள்ள புது நடைமுறை வரும் 27ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் மொபைல்போன் பயன்பாடுபடுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், பயன்படுத்துவோருக்கு பல தொல்லைகளும் ஏற்படுகிறது. இந்திய மக்கள் தொகையில், சுமார் 85 கோடிக்கும் மேற்பட்டோர் மொபைல்போன் பயன்படுத்துவதாக தெரிகிறது.

இந்நிலையில் மொபைல்போன் இணைப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பவர்களும் உண்டு.

சில மாதங்களுக்கு முன்பு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கே வீட்டுக் கடன் வேண்டுமா சார் என்று கேட்டு ஒரு வங்கியிலிருந்து வந்த அழைப்பு அவரைக் கடுப்பாக்கியதை நாடே அறியும்.

அதுகுறித்த புகார்கள் பெருகி வந்த நிலையில், மத்திய தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம், 'தேவையற்ற அழைப்புகளின் பதிவு' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டது.

ஆனால், இந்த முறை நுகர்வோரை முழுமையாக சென்றடையவில்லை. இதையடுத்து தற்போது, "தேசிய நுகர்வோர் விருப்ப பதிவு" என்ற புதிய முறை வரும் 27ம் தேதி முதல் அறிமுகப்படுத்த மத்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, 140 என்ற எண்ணை வர்த்தகம், விற்பனை, சேவை விபரங்கள் உள்ளிட்டவைகளை அறிவிக்க மொபைல்போன் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வேறு எண்களை பயன்படுத்த கூடாது.

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க விரும்பும் மக்கள், இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு எந்த தேவையில்லாத அழைப்புகளும் வராது. அதை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

English summary
To avoid unwanted calls and SMS, TRAI has introduced a new scheme for Mobile phone users. It will be implemented from Sep 27.
Write a Comment