போலீஸ் நடத்திய திடீர் ரெய்டில் 49 போலி டாக்டர்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் திடீரென போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 49 போலி டாக்டர்கள் சிக்கினர். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

இந்த மாவட்டங்களில் பெருமளவில் போலி டாக்டர்கள் புழங்கி வருவதாக போலீஸாருக்குப் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து போலீஸார் தீவிரக் கண்காணிப்பை முடுக்கி விட்டனர்.

இதையடுத்து இன்று அதிரடி ரெய்டில் நான்கு மாவட்ட போலீஸாரும் குவித்தனர். இதில் 49 போலி டாக்டர்கள் பிடிபட்டனர். இவர்களில் யாருமே கம்பவுண்டராக கூட இருந்தது கிடையாதாம். பத்தாவது, 12வது படித்து முடித்து விட்டு டைரக்ட் டாக்டர்கள் ஆனவர்கள்.

ஏதோ எம்.பி.பி.எஸ் முடித்து விட்டு டாக்டர் ஆனவர்களைப் போலவே, பக்காவாக கிளினிக் வைத்து மக்களின் உயிருடன் விளையாடிய இவர்களைப் பிடித்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

போலி டாக்டர் வேட்டை தொடரும் என காவல்துறை தெரிவித்திருப்பதால் பிடிபடாமல் எஸ்கேப் ஆகியுள்ள மற்ற போலிகளும் கிலியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
49 quacks have been arrested in Vellore, Tiruvannamalai, Kanchipuram and Tiruvallur districts. Police teams raided their fake clinics and arrested them after receiving complaints against them.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்