For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அ.தி.மு.க. வேட்பாளருக்கு தெரியாமல் மனு வாபஸ்- தூத்துக்குடியில் தேர்தல் கூத்து!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கே தெரியாமல் அவரது மனுவை வாபஸ் வாங்கி டேக்கா கொடுத்துள்ளனர் அதிமுகவினர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியில் 18வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் பிரேமா போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், இறுதிப் பட்டியலில் இவரது பெயர் 2 முறை உள்ளதாகக் கூறி பிரேமாவிடம் ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த பிரேமா, இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் நேரில் சென்று விசாரித்தார். அப்போது, அவரது மனு வாபஸ் பெறப்பட்டதாக தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த பிரேமா, தனது ஆதரவாளர்களுடன் திடீர் சாலைமறியல் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். வேட்பாளருக்குத் தெரியாமலேயே அவரிடம் கையெழுத்து வாங்கி வேட்பு மனுவை வாபஸ் பெற வைத்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Tuticorin ADMK functionaries withdrawn the nomination paper of their party candidate Prema without her knowledge. After knowing this Prema went onto agitation against this cheating.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X