For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபத்து: துண்டு துண்டாய் பூமியில் விழப் போகும் இன்னொரு செயற்கைக்கோள்

By Siva
Google Oneindia Tamil News

ROSAT
லண்டன்: செத்துப் போன அமெரிக்க செயற்கைக் கோள் சமீபத்தில் பூமியில் வந்து விழுந்ததைத் தொடர்ந்து, இந்த மாத இறுதியில் ஜெர்மனி நாட்டு செயற்கைக்கோள் ஒன்று பூமியில் விழவிருக்கிறது. இது கடந்த சில தினங்களுக்கு முன்பு பூமியில் விழுந்த நாசா செயற்கைக்கோளை விட ஆபத்தானது என்று வி்ஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பேருந்து சைஸிலான நாசாவின் செயலிழந்த செயற்கைக்கோளான யூஏஆர்எஸ் பூமியில் வந்து விழுந்தது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் இன்னொரு செயற்கைக்கோள் பூமியில் வந்து விழவிருக்கிறது.

2.4 டன் எடை கொண்ட ரான்ட்ஜன் செயற்கைக்கோள் அல்லது ரோசாட் எனப்படும் ஜெர்மனி நாட்டு செயற்கைக்கோள் கடந்த 1999-ம் ஆண்டு செயல் இழந்தது. அதில் இருந்து கடந்த 12 ஆண்டுகளாக விண்ணில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த செயற்கைக்கோள் பல துண்டுகளாக பூமியில் விழவிருக்கிறது.

அதில் சில துண்டுகள் 400 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த துண்டுகளால் பூமியில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. காரணம் இந்த செயற்கைக்கோள் துண்டுகள் எங்கு விழும் என்றே விஞ்ஞானிகளால் கணிக்க முடியவில்லை.

English summary
German space telescope Rontgensatellite, or ROSAT which has stopped functioning since 1999 is likely to hit the earth by the end of this month. Some pieces weighing 400kg may hit the earth. Scientists are unable to tell as to where it will fall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X