For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை தேவை- தலித் பாண்டியன்

Google Oneindia Tamil News

கரூர்: பரமக்குடியில் தலித் மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தலித் வன்கொடுமை தடுப்பு பிராச்சரா மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கோரிக்கை விடுத்த்துள்ளார்.

பரமக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்ததது. ஆனால் இதை தலித் அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கலவர சம்பவத்திற்கு உண்மையான காரணத்தை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தலித் சேனா அமைப்பைச் சேர்ந்த ராம்விலாஸ் இந்திய குடியரசு தலைவரிடம் மனு அளித்தார்.

இந்நிலையில், சி.பி.ஐ. விசாரணை கோரி கரூர் தாலுக்கா அலுவலம் முன்பு தலித் வன்கொடுமை தடுப்பு பிரச்சார இயக்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது அதன் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் பேசுகையில், இந்த கலவர சம்பவம் தி்ட்டமிட்ட சதி. இந்த கலவரத்திற்கு உண்மையான காரணத்தை கண்டறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் தியாகி இமானுவேல்சேகரன் பேரவை பொதுச் செயலாளர் சந்திரபோஸ், வழக்கறிஞர் ஜீவானந்தம், தமிழக முன்னேற்றக் கழக கரூர் மாவட்ட தலைவர் சக்திவேல், கிராம தொழிலாளர் முன்னணி செயலாளர் கவிதா, புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English summary
Dalit Vankodumai thaduppu prachara Iyakkam leader Dalit Pandiyan has urged for CBI investigation on Paramakudi police firing incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X