For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஐடியில் தகுதி குறைந்த மாணவர்கள் - சொல்கிறார் நாராயணமூர்த்தி

By Shankar
Google Oneindia Tamil News

Narayana Murthy
நியூயார்க்: ஐ.ஐ.டி.களுக்கு தகுதி குறைவான மாணவர்கள் வருகின்றனர் என இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி கூறினார்.

நியூயார்க்கில் 'பான் ஐ.ஐ.டி.' உச்சி மாநாட்டில் முன்னாள் ஐ.ஐ.டி. மாணவர்களிடையே நாராயணமூர்த்தி பேசினார்.

அவர் கூறுகையில், "பெரும்பாலான மாணவர்கள் தங்களின் பணிகளிலும், உயர் வகுப்பு பயிலும் பன்னாட்டு நிறுவனங்களிலும் தகுதி குறைந்தவர்களாகவே உள்ளனர்.

இதுபோன்ற மதிப்புவாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கை அனுமதி கோரும் மாணவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையை மறு ஆய்வு செய்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.

இன்றைய தேதிக்கு வெறும் 20 சதவீத மாணவர்கள்தான் போதிய தகுதியுடன் உள்ளனர். தேறுகின்றனர். மீதி 80 சதவீதத்தினர் சொல்லிக் கொள்கிறமாதிரியில்லை. ஏதோ கோச்சிங் வகுப்புகள் காரணமாக ஓரளவு நிலைமை சரியாகிறது.

கடுமையான தேர்வு முறையை கொண்டு வரவேண்டும். மாணவர் சேர்க்கை விதிகளை இன்னும் கடுமையாக்கினால் தரம் உயர வாய்ப்புள்ளது," என்றார்.

English summary
Infosys chairman emeritus N R Narayana Murthy has said there is a need to overhaul the selection criteria for students seeking admission to the prestigious technology institutions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X