For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லிபிய அதிபர் கடாபி புரட்சிப் படையினரால் சுட்டுக் கொலை!

By Siva
Google Oneindia Tamil News

Gaddafi
திரிபோலி: லிபிய முன்னாள் அதிபர் முவாம்மர் கடாபி புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடாபி 1969ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்துள்ளார். சமீபத்தில் இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் மறைமுக ஆதரவோடு நடந்த இந்தப் புரட்சிப் படையினர் பல நகர்களைப் பிடித்தனர்.

இந் நிலையில் கடநத் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி கடாபி பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். புரட்சிக்காரர்கள் கடாபியின் ஆட்களை சிறைபிடிக்கத் துவங்கினர். இதையடுத்து கடாபி குடும்பத்தார் நாட்டை விட்டே ஓடிவிட்டனர்.

ஆனால், கடாபி லிபியாவிலேயே தலைமறைவாக இருந்தார். அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் புரட்சிப் படை கடாபியின் சொந்த ஊரான சிர்டேவை இன்று கைப்பற்றியது.

அங்கு ஒரு பதுங்குக் குழியில் மறைந்திருந்த கடாபியை புரட்சிப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

English summary
Al Jazeera has reported that former Libyan president Gadaffi is killed in a gunbattle. Libyan forces have captured Gadaffi's birth place Sirte.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X