For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கபிலன் வைரமுத்துவின் நாவல் பாடல்!

By Chakra
Google Oneindia Tamil News

Kapilan Vairamuthu
பொதுவாகத் திரைப்படங்களில்தான் பாடல்கள் இடம்பெறும்.

முதல்முறையாக ஒரு நாவல் வெளியாகும் முன் அந்த நாவலின் கருவை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து எழுதி வெளிவரவிருக்கும் "உயிர்ச்சொல்" என்ற நாவலுக்காக இந்தப் பாடல் உருவாகியிருக்கிறது.

நாவல் ஆசிரியர் கபிலனே பாடலையும் எழுதியிருக்கிறார். தென்மேற்கு பருவக்காற்று புகழ் என்.ஆர்.ரஹ்னந்தன் இசை அமைத்திருக்கிறார். ஹரிணி இதற்கு குரல் கொடுத்திருக்கிறார். "ஒவ்வொரு கணமும் ஒரு துகள் இசையே" எனத் தொடங்கும் இந்தப்பாடல் இதமான பாடலாக அமைந்திருப்பதாக தயாரிப்பாளர்- மன்னிக்க வேண்டும்- பதிப்பாளர் வட்டம் தெரிவிக்கிறது.

நாவலின் தலைப்பை பார்த்தால் முழு முதற் காதல் கதையாக இருக்குமோ என்று தோன்றியது. கபிலனிடம் விசாரித்தோம். "நீண்ட நாளா குழந்தைக்கு ஏங்கிக்கிட்டு இருக்கிற ஒரு பெண்ணின் கனவு- குழந்தை பிறந்ததும் அந்த பெண்ணுக்கு ஏற்படற மன அழுத்தம்- அந்த அழுத்தத்துக்கு மருந்தாகும் கணவனின் காதல்- பின்னணில தமிழக அரசியலில் சில புதிய பரிசோதனைகள்- இதுதான் "உயிர்ச்சொல்" என்று நான்கு வரியில் கதை சொல்லிவிட்டார்.

"நீங்க சொன்ன எல்லாமே இந்த ஒரு பாட்டுக்குள்ளா இருக்கா?" என்று கேட்டதற்கு "இருக்கு" என்று யோசிக்காமல் சொல்கிறார்.

"தனக்கு பிறக்கப் போற குழந்தையப் பற்றிய ஒரு தாயின் கனவு- தன் பூமிலமாற்றத்த ஏற்படுத்த விரும்பற இளைஞர்கள பற்றிய தமிழ்த்தாயின் பூரிப்பு- தன் காதலனை நினைக்கும்போது ஒரு பெண்ணுக்குள் ஏற்படற பரவசம்- இந்த மூன்று உணர்வுகள் ஒருங்கிணையற மாதிரி இந்தப் பாடல உருவாக்கியிருக்கோம். ரஹ்னந்தன்- ஹரிணி இவங்க இரண்டு பேரோட அனுபவங்கள் இல்லனா இந்த முயற்சிய தொடங்கியிருக்கவே முடியாது" என்று நெகிழ்கிறார்.

நாவல் பாடலை www.uyirsol.com என்ற இணைய முகவரியில் பெறலாம்.

ஐந்து கவிதைத் தொகுதிகள், ஒரு சிறுகதைத் தொகுதி, ஆஸ்திரேலிய பழங்குடியினரை அடிப்படையாகக் கொண்ட பூமரேங் பூமி என்ற நாவல் ஆகிய புத்தகங்களுக்குப் பிறகு கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் இரண்டாம் நாவல் இது. இந்தப் புத்தகத்தை நவம்பர் மாத இறுதியில் கிழக்குப் பதிப்பகம் வெளியிடுகிறது.

English summary
'For the first time in Tamil Literature world, Kabilan has written lyrics for a theme song to his Novel.'. It talks about a women's longing for a child and after the birth of the child the psychological transformation she undergoes. Kabilan has dealt her 'travel' in the small Tamil Nadu political back drop. The whole lyrics can be read in www.uyirsol.com
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X