For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்கூடாது: வைகோ

By Chakra
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக் கூடாது என்று மதிமுக உயர்மட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதிமுக மாவட்ட செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு கூட்டம் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சென்னை தாயகத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

- தமிழகம் முழுவதும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்திடவும், கிளைகள் இல்லாத ஊரில் கிளைக் கழகம் அமைக்கவும், இந்தப் பணிகளை டிசம்பர் 31ம் தேதிக்குள் நிறைவு செய்திட வேண்டும்.

- அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கோட்டூர்புரத்தில் இருந்து அகற்றும் தமிழக அமைச்சரவை முடிவு மிகவும் கண்டனத்துக்குரியது. அண்ணா புகழுக்கு பெருமை சேர்க்கின்ற இந்த நூலகத்தை மாற்றக் கூடாது.

- பணியில் இருந்து நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி 17ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

- உர விலையை கட்டுப்படுத்தக் கோரி நவம்பர் 18ம் தேதி தஞ்சையில் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

- கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து தென் தமிழகத்தை பாதுகாக்கின்ற வகையில் அணு மின் நிலைய பணிகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

English summary
MDMK has slammed the ADMK government's decision to convert the Anna Centenary Library into a children's hospital. It has demanded the CM Jayalalitha to cancel the move
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X