For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழில் ஒரு SLAM BOOK நாவல்

By Chakra
Google Oneindia Tamil News

Kabilan Vairamuthu
சமூக மாற்றத்திற்காக போராடும் ஒரு இளைஞர் இயக்கத்திற்கு வேண்டா வெறுப்பாக விளம்பர சேவை செய்யும் அமலன்- அவர் மனைவி தருணா - இவர்களைச் சுற்றித்தான் நகர்கிறது கபிலன்வைரமுத்து எழுதியிருக்கும் "உயிர்ச்சொல்" நாவல். நீண்ட நாட்களாக குழந்தைக்கு ஏங்கி பின் குழந்தை பிறந்ததும் தருணா சந்திக்கும் ஒருவித மன அழுத்தங்களை ஆழமாக பதிவு செய்திருக்கிறார் கபிலன்.

நாவல் பற்றி துளிச் செய்திகள்:

1. முதல் முறையாக ஒரு நாவலுக்கு முன்னோட்டப் பாடல் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டிருக்கிறது.

புத்தகத்தோடு சி.டி. இணைக்கப்பட்டிருக்கிறது.

2. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இந்த நாவலை வெளியிட்டிருக்கிறார்.

3. தருணாவும் அமலனும் தங்கள் அனுபவங்களை எழுதிக்கொள்ளும் slambook- ஆக முழு நாவலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

4. கதையில் வரும் தருணா ஓவியத்தில் நாட்டமுடையவள். அவள் வரைவதுபோல கதையோடு இழைந்த அவள் ஓவியங்களைப் புத்தகமெங்கும் காண முடிகிறது.

யாரும் அதிகம் பகிர்ந்துகொள்ளாத ஒருவித மன அழுத்தத்திற்கான விழிப்புணர்ச்சியாக இந்தப் புத்தகம் இருக்க வேண்டும் என்பது கபிலனின் எண்ணம். அந்த எண்ணத்தைத் தாண்டி இதில் வரும் அரசியல் பரிசோதனைகளும் சில ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தூண்டுமெனத் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

www.uyirsol.com என்ற தளத்தில் புத்தக விற்பனை தொடர்பான தகவல்களை பெறலாம்.

English summary
When Caders of various political parties shun their difference and form a revolutionary force, to the growth of the State.. This is the theme Kabilan's new novel Uyirsol revolves around.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X